பாமகவில் இருந்து விலகிய ராஜேஸ்வரி கமல் கட்சியில் இணைய திட்டம்?

By vinoth kumarFirst Published Feb 24, 2019, 10:32 AM IST
Highlights

பாமகவிலிருந்து விலகிய இளைஞர் அணி மாநில செயலாளர் ராஜேஸ்வரி மக்கள் நீதி மய்யத்தில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

பாமகவிலிருந்து விலகிய இளைஞர் அணி மாநில செயலாளர் ராஜேஸ்வரி மக்கள் நீதி மய்யத்தில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இனி திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி கிடையாது என கடுமையாக விமர்சித்து வந்த பாமக திடீரென மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பிப்ரவரி 19-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையில், பாமகவுக்கு 7 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அதிமுக - பாமக கூட்டணி தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. கடந்த காலங்களில் அதிமுகவை கடுமையாக விமர்சித்து அன்புமணி பேசிய வீடியோக்களும் வைரலானது. அதுமட்டுமல்லாமல் பாமக கட்சியினரிடையே கடும் அதிருப்தியை  ஏற்படுத்தியது. இந்நிலையில் பாமக இளைஞர் அணி மாநிலச் செயலாளராகப் பதவி வகித்து வந்த ராஜேஸ்வரி இந்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிரடியாக பாமகவில் இருந்து விலகினார். இதனையடுத்து கடலின் மக்கள் நீதி மய்யத்தில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் என்னுடைய இந்த தைரியமான முடிவைப் பல கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக தினகரன், சீமான், கமல்ஹாசனிடம் வாழ்த்துகள் வந்தன. ஆனால் கமல்ஹாசன் என்னுடைய இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்து, நேரில் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். அதற்காகத்தான் அவரை நேரில் சந்திக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாற்றுக் கட்சியில் சேருவது தொடர்பாக இதுவரை எந்த முடிவு எடுக்கவில்லை என்று கூறினார். 

click me!