பேனர் வைக்கிறது ஒரு யூஸ்லெஸ் வேலை...!! அதிமுகவை ஊமை குத்தாக குத்திய அன்புமணி...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 4, 2019, 6:03 PM IST
Highlights

பேனர் வைக்கும் கலாச்சாரம் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்று கூறிய அவர்,  பேனர் வைப்பது தேவையில்லாத ஒரு செயல் என்றார்.  பேனர் கலாச்சாரத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்பதுதான் பாமகவின் கொள்கை

சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் வருகைக்காக பேனர் வைப்பதை தமிழக அரசு முற்றிலுமாக தவிர்க்க வேண்டுமென பாமக இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்ட பேனர் கழன்று விழுந்ததில் இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார் அது  தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சட்டவிரோதமாக பேனர் வைத்த வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபாலை போலீசார் கைது செய்தனர்.  ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் முன்வந்து பேனர் வைக்க மாட்டோம் என  வாக்குறுதி கொடுத்துள்ளனர். இந்நிலையில் சுபஸ்ரீ உயிரிழந்தது முதல் இதுநாள்வரை பேனர் விவகாரத்தில் மவுனம் காத்துவந்த அதிமுக இப்போது பிரதமர் மோடியும் சீனா அதிபரும் தமிழகம் வர உள்ளதால் வரவேற்பு நிகழ்ச்சிக்காக பேனர் வைக்க அனுமதி தர வேண்டுமென நீதிமன்றத்தை நாடி அதற்கு அனுமதியும் பெற்றுள்ளது.

இது பொதுமக்களிடையே அதிமுகவின் மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சுபஸ்ரீயின் தாயாரும் பிரதமர் மோடியை  பேனர் வைத்துத்தான் வரவேற்க வேண்டுமா, வரவேற்க வேறு வழியே இல்லையா என்றும் கேள்வி எழுப்பி அதிமுக அரசை சாடியுள்ளார். இந் நிலையில் அதிமுக கொண்டுவரும் திட்டங்களை வரவேற்று கருத்துக் கூறும்  கூட்டணி  கட்சியான பாமக பேனர் விகாரத்தில் தற்போது அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து  இன்று கோவை விமான நிலையத்தில்  செய்தியாளர் தான் பேசிய பாமக இளைஞர் அணித் தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ்,

 

சீனா  அதிபர், இந்திய  பிரதமர் வருகைக்காக பேனர்  வைப்பதை தமிழக அரசு முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றார்.  பேனர் வைக்கும் கலாச்சாரம் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்று கூறிய அவர்,  பேனர் வைப்பது தேவையில்லாத ஒரு செயல் என்றார்.  பேனர் கலாச்சாரத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்பதுதான் பாமகவின் கொள்கை என்றும் கூறினார். அன்புமணியின் இக் கருத்து, அதிமுக தொண்டர்களை எரிச்சலடையச் செய்துள்ளது

click me!