மோடி பராக் பராக்! மாமல்லபுர கடலில் அலைகளுக்கு தடை: பதறவிடும் பாதுகாப்பு அம்சங்கள்.

By Vishnu PriyaFirst Published Oct 4, 2019, 4:58 PM IST
Highlights

உச்சி மாநாடு, உச்சி மாநாடுன்னு சேனல்கள், பேப்பர்களில் நியூஸ் பார்த்திருக்கிறோம். அதென்ன உச்சி மாநாடு?ன்னு பல பேருக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமுமா இருக்கும். ஆனால்,  மாமல்லபுரம் உண்மையிலேயே உச்சகட்ட பாதுகாப்பை பார்த்துக் கொண்டிருக்கிறது.

உச்சி மாநாடு, உச்சி மாநாடுன்னு சேனல்கள், பேப்பர்களில் நியூஸ் பார்த்திருக்கிறோம். அதென்ன உச்சி மாநாடு?ன்னு பல பேருக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமுமா இருக்கும். ஆனால்,  மாமல்லபுரம் உண்மையிலேயே உச்சகட்ட பாதுகாப்பை பார்த்துக் கொண்டிருக்கிறது. 

சர்வதேச அளவில் வலிமையான அந்தஸ்தை பெற்றிருக்கும் நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியும், சீன நாட்டின் அதிபர் ஜி ஜின் பிங்கும் கலந்து கொள்ளும் இரண்டாவது உச்சிமாநாடு வருகிற 11ம் தேதி முதல் மூன்று நாட்கள் சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடக்கிறது. எனவே இரண்டு பெரிய நாடுகளான இந்தியா மற்றும் சீனா இரண்டின் மிக முக்கிய பாதுகாப்பு பிரதேசமாக மாமல்லபுரம் மாறி  இருக்கிறது. தமிழக முதல்வர் எடப்பாடியார் மேற்படி பகுதிகளை விசிட் செய்து ஆய்வையும் முடித்துள்ளார். இன்னும் சில நாட்களில் இந்த உச்சிமாநாடு நடக்க இருக்கும் நிலையில் சென்னையிலிருந்து துவங்கி மாமல்லபுரம் வரை என்ன (வெல்லாம்) நடக்கிறது? என்பதை அறிந்து கொள்வோமா!....

*    சீன அதிபர் உடனான இந்த சந்திப்பை முதலில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் நடத்த திட்டமிட்டுனர். ஆனால் இந்த மாநாட்டை பயன்படுத்தி தமிழர்கள் மனதில் மோடிக்கு தனி  செல்வாக்கினை உருவாக்கிட முடியும் என்பதால் மாமல்லபுரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

*    மாமல்லபுர கோயில்களெல்லாம் பல்லவர் காலத்தில் உருவானவை. பல்லவ இளவரசரான போதிதர்மர் சீன  தேசம் சென்றதும், பாதுகாப்பு கலைகளை உருவாக்கிய  வரலாறும் உண்டு. போதி தர்மரை கிட்டத்தட்ட தெய்வமாக வணங்குகிறது சீனா. அதன் அதிபருக்கு  ‘உங்களின் கடவுள் பிறந்த மண் இது!’ என்று காட்டிடவும் மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். 

*    மாமல்லபுரம் நோக்கிய சென்னை சிட்டியின் சாலைகள் பளபளக்க துவங்கியுள்ளன. சாலைகளில் உள்ள குப்பைகள்,  களைச்செடிகள், பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுகின்றன. 

*    மாமல்ல புரம் பகுதி முழுக்கவும் காவல்துறையின் கட்டுப்பாட்டினுள் வந்துள்ளது. மோடியும், ஜின்னும் சுற்றிப் பார்க்க இருக்கும் பஞ்சரதம், குகைக்கோயில் போன்ற ஏரியாக்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. பல வருடங்களாக பல கோடி மக்கள் வந்து சென்றாலும், கவனிப்பின்றி கிடந்த பல்லாங்குழி ரோடுகள் பக்காவாக சீரமைக்கப்படுகின்றன. 

*     மாமல்லபுரத்தின் உள் மற்றும் வெளிப்பகுதிகள் முழுக்க ‘தூய்மை இந்தியா’ திட்டம் செம்ம ஸ்ட்ரிக்டாக கவனிக்கப்படுகிறது. 

*    சுற்றுலா தேசமான இங்கிருக்கும் கடைகளின் பெயர்ப்பலகைகள் நீக்கப்பட்டு, அவற்றுக்கு வெறும் நம்பர் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கடை வைத்திருப்போரின் ஆதார்கார்டு, செல் நம்பர் ஆகியன ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. 

*    இன்னும் சில நாட்களில் தெருவோர கடைகள் தடை செய்யப்படும். (உச்சி மாநாடு முடியும் வரைதான்!)

*    கடற்கரை கோயிலுக்கு நுழையும் வழியில் புதிதாக புத்தர் சிலை வைக்கப்படுள்ளது. இது சீன அதிபரை கவர. 

*    கடற்கரை கோயிலினுள், இரு தலைவர்களும் சுற்றிப் பார்க்கும் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தப்போகும் இடங்கள் எல்லாமே பராமரிக்கப்படுகின்றன .

*    மாமல்லபுரத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தூரத்திலுள்ள கோவளம் ‘ஃபிஷர் மேன் கேவ்’ எனும் இடத்தில்தான் மோடி மற்றும் ஜி ஜின் பிங் இருவரும் தங்கப்போகிறார்கள். இ.சி.ஆர். சாலையிலிருந்து இந்த ரெசார்ட் வரை டைல்ஸ் பதித்த நடைபாதையுடன் ஸ்பெஷல் ரோடு தயாராகிறதாம். 


*    ஒட்டுமொத்த பிரதேசமும் சீன அதிபரின் பாதுகாப்பு படை மற்றும் நம் பிரதமருக்கு பிரத்யேக பாதுகாப்பு வழங்கும் எஸ்.பி.ஜி. டீமின் கட்டுப்பாட்டினுள் இருக்கிறது.  இப்படியாக பாதுகாப்பு அம்சங்கள்  போய்க் கொண்டிருக்கின்றன. மாமல்லபுரத்தை சுற்றி மீனவர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதி. அவர்களுக்கு இந்த சர்வதேச அளவிலான பாதுகாப்பு விஷயங்கள் ஆச்சரியத்தை தந்தாலும் கூட, மாநாடு முடியும் வரையில் அவர்களின் இயல்பான வாழ்க்கை நிலை தடைபட்டுள்ளது உண்மையே. 

அதனால் ‘இன்னாபா வுட்டாக்க மாமல்லபுர கடல்ல வரக்கூடிய அலைகளோட எண்ணிக்கைக்கும் தடை போடுவீங்க போலிருக்குதே!’ என்கிறார்கள். 
அதானே!

click me!