புதுச்சேரியில் பிரதமர் மோடி திறந்துவைக்கும் மற்றும் அடிக்கல் நாட்டும் திட்டங்கள்..! முழு விவரம்

By karthikeyan VFirst Published Feb 24, 2021, 6:14 PM IST
Highlights

புதுச்சேரிக்கு  நாளை(வியாழக்கிழமை) வருகைதரும் பிரதமர் நரேந்திர மோடி, புதுச்சேரியில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைப்பதுடன், சில திட்டங்களுக்கான அடிக்கல்லையும் நாட்டவுள்ளார்.
 

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையை இழந்ததால் ஆட்சி கவிழ்ந்தது. புதுச்சேரியில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது பாஜக. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை(வியாழக்கிழமை) புதுச்சேரிக்கு வருகைதந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.

டெல்லியிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் காலை 11 மணிக்கு புதுச்சேரிக்கு வருகிறார். காலை 11.30 மணிக்கு புதுச்சேரி ஜிப்மரில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.

பிரதமர் மோடி திறந்துவைக்கும் மற்றும் அடிக்கல் நாட்டும் திட்டங்கள்:

* ரூ.2,426 கோடி மதிப்பிலான சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் இடையிலான என்எச் 45-ஏ தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கான அடிக்கல் நாட்டுகிறார்.

* காரைக்கால் புதிய ஜிப்மர் வளாகத்தில் ரூ.491 கோடி மதிப்பில் கட்டப்படும் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுகிறார்.

* சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் புதுச்சேரியில் சிறிய துறைமுகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.

*  புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டுத் திடலில் பழைய ஓட்டப்பந்தய ஓடுதளத்தை மாற்றி ரூ.7 கோடியில் 400 மீட்டரில் செயற்கை ஓடுதளம் அமைக்கவும் அடிக்கல் நாட்டுகிறார்.

* ஜிப்மரில் ரூ.28 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆய்வுக்கூடம் மற்றும் பயிற்சி மையத்துடன் கூடிய ரத்த மையத்தை தொடங்கிவைக்கிறார்.

* புதுச்சேரி கடற்கரை சாலையில் ரூ.14.83 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மேரி கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

*லாஸ்பேட்டையில் ரூ.11.85 கோடியில் கட்டப்பட்டுள்ள 100 படுக்கைகளுடன் கூடிய மகளிர் விடுதியை திறந்துவைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
 

click me!