தமிழகம் வரம்புக்கு மேல் இன்னும் கடன் வாங்கவில்லை.. நிதித் துறை செயலாளர் அதிரடி விளக்கம்..

Published : Feb 24, 2021, 05:33 PM IST
தமிழகம் வரம்புக்கு மேல் இன்னும் கடன் வாங்கவில்லை.. நிதித் துறை செயலாளர் அதிரடி விளக்கம்..

சுருக்கம்

மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 5% கடன் வாங்கும் தன்மை உள்ளது. அடுத்த நிதி ஆண்டிற்கு கடன் வாங்கும் தன்மை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை தலைமை செயலகத்தில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இந்த ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். கொரோனா காலத்தில் அதிக செலவினங்கள் ஏற்பட்டது. மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது 7% அளவிற்கு வீழ்ச்சி இருக்கும் என்று தெரிவித்தார். ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை இந்த நிதியாண்டு 2.02% positive growth இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏறத்தாழ 2 ஆயிரம் கோடி மூலதனத்தில் செலவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 5% கடன் வாங்கும் தன்மை உள்ளது. அடுத்த நிதி ஆண்டிற்கு கடன் வாங்கும் தன்மை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்தவொரு நடப்பு திட்டங்கள் மற்றும் புது வரி எதுவும் விதிக்காமல் இருப்பது என இரண்டும் கணக்கிடப்பட்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மாநில மொத்த கடன் அதிமாகி இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கடன் அளவு உயரும் போது, பொருளாதார நிலையும் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 

ஓவ்வொரு ஆண்டும் கூடுதல் கடன் வாங்குவது, மாநிலத்தின் ஜி.டி.பி அளவை வைத்து தான் வாங்கப்படுகிறது. தமிழகம் வரம்புக்கு மேல் இன்னும் கடன் வாங்கவில்லை என்றும், ஒரு சில மாநிலங்கள் அவர்களின் வரம்பை மீறி கடன் வாங்கியுள்ள நிலையில், தமிழகம் அதுபோன்று வாங்க வில்லை என்று விளக்கம் அளித்தார் பெட்ரோல் விலை குறைந்தாலும், அதிகமானாலும் அதற்கு வாங்கப்படும் வரியில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், மாநிலத்தின் வரியால் பெட்ரோல் விலை உயரவில்லை என்றும் கூறினார்.

 
 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை... கடைசியில் மண்டியிட்ட வங்கதேசம்..!
ஹமாஸை ஒழிப்பதில் நாங்களே தலைமை தாங்குவோம்.. அமெரிக்காவிடம் அடம்பிடிக்கும் பாகிஸ்தான் இராணுவம்..!