ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா.. அறிக்கையில் பொதுச்செயலாளர் பதவியும் அதிமுக கொடியும்.. அரண்டு போன ஓபிஎஸ், இபிஎஸ்..!

Published : Feb 24, 2021, 05:48 PM IST
ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா.. அறிக்கையில் பொதுச்செயலாளர் பதவியும் அதிமுக கொடியும்.. அரண்டு போன ஓபிஎஸ், இபிஎஸ்..!

சுருக்கம்

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்தியது தொடர்பாக அதிமுக கொடியும், பொதுச்செயலாளர் என்று சசிகலா அறிக்கை வெளியிட்ட சம்பவம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்தியது தொடர்பாக அதிமுக கொடியும், பொதுச்செயலாளர் என்று சசிகலா அறிக்கை வெளியிட்ட சம்பவம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

ஜெயலலிதாவின் 73-வது பிறந்தாளையொட்டி, தி.நகர் இல்லத்தில் ஜெயலலிதாவின் படத்துக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து, தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சியமைப்போம். விரைவில் தொண்டர்களையும் மக்களையும் சந்திக்க வருவேன் என்றார்.

இந்நிலையில், சசிகலா தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றாக் கழகத்தின் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அச்சமயம் இதில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கி புரட்சித்தலைவியின் பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடினார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்த செய்தி அறிக்கையை வெளியிட்டது, கழக பொதுச்செயலாளரின் முகாம் அலுவலகம், 179/68, ஹபீபுல்லா ரோடு, தியாகராய நகர், என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏற்கனவே சசிகலா சென்னை வந்த போது அவர் அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். பல எதிர்ப்புகளை தாண்டியும் சசிகலா, அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரிலேயே சென்னை வந்தடைந்து அதிமுகவினர் வயிற்றில் புளியைக் கரைக்கச் செய்தார். சசிகலாவுக்கு அதிமுக தரப்பில் இருந்து இத்தகைய எதிர்ப்புகள் கிளம்பி வரும் சூழலில், சசிகலாவின் இந்த அறிக்கை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்
விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!