10:30 மணிக்கு வரும் மோடி, நேரடியாக முறையிட குடும்பத்தினர் திட்டம்!

First Published Aug 7, 2018, 11:01 PM IST
Highlights

கருணாநிதியின் உடலை கொண்டு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆனது. வழி நெடுக மக்கள் திரண்டு தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர். 

கலைஞர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் இயற்கை ஏய்தியதை  அடுத்து அவருடைய உடல் தற்பொழுது கோபாலபுரத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.  காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரத்திற்கு சாதாரண நாட்களில் வெறும் 10 நிமிடங்களில் சென்று விடலாம். ஆனால் இன்று, கருணாநிதியின் உடலை கொண்டு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆனது. வழி நெடுக மக்கள் திரண்டு தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர். 

திமுக தொண்டர்கள் அனைவரும் தற்பொழுது கோபாலபுரத்தில் குவிந்து காணப்படுகின்றனர். வழி நெடுக 'ஐயோ, தெய்வமே! கடவுளே! என்ற அழுகை குரல்கள் கேட்டவண்ணம் இருந்தது. சமூக வலைத்தளங்கள் முழுவதும் கலைஞர் கருணாநிதி பற்றிய பேச்சுகளாகவே உள்ளது. தமிழக சினிமா துறையை சேர்ந்த பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்த வருகின்றனர். 

தமிழகம் மட்டுமில்லாமல், இந்திய அளவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள்  இரங்கல்களை தெரிவித்து வரும் இவ்வேளையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10 : 30 மணிக்கு கலைஞர் அவர்களின் உடலை காண வருகின்றார். கலைஞர் அவர்களின் உடலை மெரினாவில் அடக்கம்  செய்ய தமிழக அரசு மறுத்ததை தொடர்ந்து, பிரதமர் மோடியிடம் நாளை காலை கருணாநிதி குடும்பத்தினர் முறையிட முடிவு செய்துள்ளனர்.

click me!