முதன் முறையாக பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கை.... மோடி சொன்ன அறிவுரை என்ன தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published May 8, 2021, 7:11 PM IST
Highlights

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக , புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்தியாவில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக்  கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு ஆகியன பிறப்பிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். 

ஆந்திரா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் நிலவும் கொரோனா சூழல் குறித்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். அப்போது பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்திற்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக , புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

 இந்தக் கோரிக்கையை உடனடியாகப் பரிசீலிப்பதாக உறுதியளித்த  பிரதமர் அவர்கள் , கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பரிசோதனைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் , தொற்றால் அதிகம் பாதிக்கப்படாத நோயாளிகளை வீட்டிலேயே இருக்கச் செய்து கண்காணிப்பதில் கவனம் செலுத்துமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 


 

click me!