உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் திட்டப் பணிகள் தொடங்கியது.. சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் தகவல்.

Published : May 08, 2021, 05:35 PM IST
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் திட்டப் பணிகள் தொடங்கியது..  சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் தகவல்.

சுருக்கம்

அவர் இதுவரை 6 இலட்சம் புகார்கள் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் மூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் முதற்கட்டமாக 6 இலட்சம் புகார்களையும் கணினியில் ஏற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.  

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் திட்டப் பணிகள் தொடக்கப்பட்டுள்ளதாக சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பரப்புரையின் போது மாவட்டந்தோறும் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மனுக்களைப் பெற்றதுடன், ஆட்சிக்கு வந்தால், நூறு நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதி அளித்திருந்தார். 

இந்த நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற முதல் நாளே ஐந்து முக்கிய அறிவிப்புகளில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இதில் நான்காவது அறிவிப்பாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி இந்திய ஆட்சிப்பணி நிலை அலுவலர் ஒருவர் நியமிப்பதற்காக அரசாணை வெளியிட ஒப்புதல் அளித்தார்.இந்த நிலையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறைக்கு சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நேற்று நியமனம் செய்யப்பட்டார்.

அவர் இதுவரை 6 இலட்சம் புகார்கள் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் மூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் முதற்கட்டமாக 6 இலட்சம் புகார்களையும் கணினியில் ஏற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். அடுத்தக்கட்டமாக எந்தெந்த துறை சார்ந்த புகார்கள் பெறப்பட்டதோ, அந்த புகார்கள் அனைத்தும்  தனித்தனியே பிரிக்கும் பணிகளும், பின்னர் புகார்கள் மாவட்டம் தோறும் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஷில்பா பிரபாகர் தகவல் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி