தமிழகம் எப்போதும் வித்தியாசமான திட்டங்களைக் கொடுக்கும்... தமிழகத்தை நாம் பின்பற்ற வேண்டும்.. தமிழகத்துக்கு பிரதமர் மோடி அப்லாஸ்!

By Asianet TamilFirst Published Jan 27, 2020, 7:13 AM IST
Highlights

தமிழகம் எப்போதுமே இந்தியாவுக்கு பல வித்தியாசமான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றும் புதிய யோசனையானது தமிழகத்தில் உதித்துள்ளது. ஆழ்துளை கிணறுகளில்0 ஏற்படும் விபத்துகளை தடுக்க இது உதவும். இதன் மூலம் அதிக அளவில் தண்ணீர் சேகரிக்கவும் நம்மால் முடியும். அவர்களை நாம் பின்பற்ற வேண்டும்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

தமிழகம் எப்போதுமே இந்தியாவுக்கு பல வித்தியாசமான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலம் வானொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிவருகிறார். அதன்படி குடியரசு தினத்தன்று பிரதமர் மோடி உரையாற்றினார் 
“2020-ம் ஆண்டில் முதல் ‘மன் கி பாத்’ மூலம் மக்களிடம் பேசுவது மகிழ்ச்சி. எல்லோருக்கும் இனிய குடியரசுத் தின வாழ்த்துக்கள்.  இரு வாரங்களுக்கு முன்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிஹு, பொங்கல், லோஹ்ரி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் ப்ரூ-ரியாங் இன மக்களுக்கு நிரந்தர இருப்பிடங்கள் வழங்கப்பட்டன.

பிப்ரவரி 22 முதல் மார்ச் 1 வரை, ‘கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள்’ ஒடிஷாவில் கட்டாக், புவனேஸ்வரில் நடைபெற உள்ளன. இந்தியாவில் விளையாட்டு துறை இன்னும் வேகமாக வளரும். தேசிய அளவில் புதிய விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள். திறமையான வீரர், வீராங்கனைகள் நாட்டுக்குக் கிடைப்பார்கள்.

click me!