கட்சிக்காகவும், ஆட்சிக்காகவும் நடிப்பதைய பொழப்பாக வைத்திருக்கம் பிரதமர் மோடி.. மீண்டும் சீனுக்கு வரும் EVKS.!

Published : Oct 18, 2021, 12:53 PM IST
கட்சிக்காகவும், ஆட்சிக்காகவும் நடிப்பதைய பொழப்பாக வைத்திருக்கம் பிரதமர் மோடி.. மீண்டும் சீனுக்கு வரும் EVKS.!

சுருக்கம்

நடிப்பால் மக்களை கட்டிப்போட்ட சிவாஜியால் அரசியலில் மக்கள் முன் நடிக்க தெரியவில்லை. அதனால் தான் அவரால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை.காமராஜர், நேரு, இந்திரா என்று எத்தனையோ தியாகம் செய்த தலைவர்கள் நேர்மையான அரசியலால் மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.

பிரதமர் மோடி போல் நடிக்க தெரிந்தால் மட்டுமே அரசியலில் வெற்றி பெற முடியும் என்று நினைக்க தோன்றுகிறது என  ஈவிகேஎஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன்;- திரையில் மட்டுமே நடிக்க தெரிந்த நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி. சுதந்திர போராட்ட தலைவர்களையும், வரலாற்றையும் தலைமுறைக்கும் நினைவு படுத்தியவர். கட்டப்பொம்மனையும், வ.உ.சி.யையும், சிவாஜிவையும் பார்க்காதவர்களையம் தன் நடிப்பு திறமையால் பார்க்க வைத்தவர்.

நடிப்பால் மக்களை கட்டிப்போட்ட சிவாஜியால் அரசியலில் மக்கள் முன் நடிக்க தெரியவில்லை. அதனால் தான் அவரால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை. காமராஜர், நேரு, இந்திரா என்று எத்தனையோ தியாகம் செய்த தலைவர்கள் நேர்மையான அரசியலால் மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.

ஆனால் இன்று நிலைமையை பாருங்கள். மோடி மக்களிடம் நடித்தே ஏமாற்றுகிறார். அவரைப் போல் நடிக்க தெரிந்தால் மட்டுமே அரசியலில் வெற்றி பெற முடியும் என்று நினைக்க தோன்றுகிறது. சினிமாவில் காட்சிக்காக பொய், புரட்டுகளை சொல்லி நடிப்பார்கள். ஆனால் கட்சிக்காகவும், ஆட்சிக்காகவும் நடித்தே மக்களை ஏமாற்றி கொண்டிருப்பவர் மோடி என  ஈவிகேஎஸ். இளங்கோவன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ஜெ.வை எதிர்த்து கட்சி தொடங்கி ஜெ.வுடனே கூட்டணி வைத்த மூப்பனார்.! தாமாக பின்னர் என்ன ஆனது? சுவாரஸ்ய கதை.!
நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!