கொரோனா பரவலுக்கு மோடியே காரணம்.. டிரம்புடன் வந்த அதிகாரிகளால் மும்பையில் பரவியது..சிவசேனா பகீர் குற்றச்சாட்டு!

Published : May 31, 2020, 08:21 PM IST
கொரோனா பரவலுக்கு மோடியே காரணம்.. டிரம்புடன் வந்த அதிகாரிகளால் மும்பையில் பரவியது..சிவசேனா பகீர் குற்றச்சாட்டு!

சுருக்கம்

கொரோனா வைரஸை காரணம் காட்டி உத்தவ் தாக்கரே அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர்ஆட்சியை கொண்டுவர முயற்சித்தால் அது தற்கொலைக்கு சமம். இதே விஷயத்தை காரணம் காட்டி நாட்டில் 17 மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும். அப்படியானால் பாஜக ஆளும் மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும். கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசும் தோல்வி அடைந்துவிட்டது. 

மும்பையில் கொரோனா வைரஸ் பரவ பிரதமர் மோடி நடத்திய ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியே காரணம் என்று சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
  நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த உத்தவ் தாக்கரே அரசு  தவறிவிட்டதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம் சாட்டிவருகிறது. இதனால், மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் அக்கட்சி கோரிவருகிறது. இந்நிலையில் சிவசேனா கட்சியின் நாளேடான ‘சாம்னா’வில் அக்கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் எழுதியுள்ள பாஜகவை குற்றம் சாட்டி கட்டுரை எழுதியுள்ளார்.
 அதில், “கரோனா வைரஸ் குஜராத்தில் தீவிரமாக பரவ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அழைத்துவந்து மக்களை திரட்டி பிரதமர் மோடி நடத்திய நமஸ்தே டிரம்ப் காரணம் என்று கூறுவதை யாரும் மறுக்க முடியாது. அதிபர் டிரம்ப்புடன் வந்த அமெரிக்க அதிகாரிகள் சிலர் மும்பை, டெல்லிக்கும் சென்று கொரோனா வைரஸைப் பரப்பிவி்ட்டார்கள். குஜராத்தில் கொரோனாவால் 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தும் உள்ளனர்.
கொரோனா வைரஸை காரணம் காட்டி உத்தவ் தாக்கரே அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர்ஆட்சியை கொண்டுவர முயற்சித்தால் அது தற்கொலைக்கு சமம். இதே விஷயத்தை காரணம் காட்டி நாட்டில் 17 மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும். அப்படியானால் பாஜக ஆளும் மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும். கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசும் தோல்வி அடைந்துவிட்டது. மத்திய அரசுக்கு எந்தத் திட்டமிடலும் இல்லை. மத்திய அரசு கொண்டுவந்த லாக்டவுன் தோல்வி அடைந்துவிட்டது என ராகுல் காந்தி அழகாக தெளிவுபடுத்தியுள்ளார்.மத்திய அரசு எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் லாக்டவுனை நடைமுறைப்படுத்தியது. இப்போதும் திட்டமிடல் இல்லை.  இதுபோன்ற குழப்பங்கள் கரோனா சிக்கலை மேலும் மோசமாக்கும்.” என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு