எம்.ஜி.ஆருடன் நின்றிருக்கும் இவர் யார் தெரியுமா? தற்போதைய அதிமுக அமைச்சரின் தந்தை..!

By vinoth kumarFirst Published May 31, 2020, 5:27 PM IST
Highlights

தமிழக சட்டத்துறை அமைச்சரான சி.வி. சண்முகம் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவருடைய தந்தை வேணுகோபால் வந்தவாசி தொகுதி எம்.பி. யாகவும், ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட அதிமுக அமைப்பாளராகவும் இருந்துள்ளார்.

தமிழக சட்டத்துறை அமைச்சரான சி.வி. சண்முகம் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவருடைய தந்தை வேணுகோபால் வந்தவாசி தொகுதி எம்.பி. யாகவும், ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட அதிமுக அமைப்பாளராகவும் இருந்துள்ளார்.

அண்ணா மறைவுக்கு பிறகு திமுகவில் இருந்து விலகிய பின் எம்.ஜி.ஆர். 1972ம் ஆண்டு அதிமுகவை தொடங்கினார். திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டதும் தமிழகமே கொந்தளித்தது. எம்.ஜி.ஆரின் ரசிகர்களும், அவருடைய ஆதரவாளர்களாக இருந்த திமுகவினரும் பெருவாரியாக திரண்டு வந்து எம்.ஜி.ஆர். பின்னால் நின்றனர். அப்போது, எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக இருந்தவர் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தந்தை வி.வேணுகோபால். 1977ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வந்தவாசி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு மாபெரும் பெற்றி பெற்றார். இதனையடுத்து, அவருக்கு தென்னாற்காடு மாவட்ட அதிமுக அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 

சி.வி.சண்முகத்தின் தந்தை எப்படி எம்.ஜி.ஆருக்கு  விஸ்வாசமாக இருந்தது போல, ஜெயலிலதாவிற்கும், அதிமுகவிற்கும் தந்தையை போலே அமைச்சர் சி.வி.சண்முகம் இதுவரை கட்சிக்கு விஸ்வாசமாக இருந்து வருகிறார். தற்போதைய எடப்பாடி அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருக்கும் சி.வி. சண்முகம் (55). இவர் சட்டப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இவர் ஏற்கெனவே 2001-ல் திண்டிவனம் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வி மற்றும் வணிக வரித்துறை அமைச்சராக இருந்தார். மீண்டும் 2006-ல் அதே தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்நிலையில் திண்டிவனம் தொகுதி மறுசீரமைப்பில் தனித்தொகுதியாக மாற்றப்பட்டது. எனவே அவர் மயிலம் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

இருப்பினும் திருச்சியில் திமுக மாநாடு நடந்தபோது ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசிய அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடியை தோற்கடிக்க பலமான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.  அதேபோல் சி.வி. சண்முகம் விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடுமையான போட்டி நிலவியது. இதனையடுத்து,  திமுக முன்னாள் அமைச்சர் க. பொன்முடியைவிட 12,097 வாக்குகள் அதிகம் பெற்று சி.வி. சண்முகம் வெற்றிபெற்றார். 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று தற்போது சட்டத்துறை அமைச்சராக உள்ளார். ஜெயலலிதா இறந்த பிறகும் பலர் கட்சி மாறினர். ஆனாலும், அதிமுக தான் தன் உயிர் மூச்சு என்று ஒரே கட்சியில் இருந்து வருகிறார்.

click me!