அப்பாயின்மென்ட் கேன்சல்.. ஈபிஎஸ், ஓபிஎஸ்சை சந்திக்காத மோடி - ஒருவேளை அவரா இருக்குமோ.!!

By Raghupati R  |  First Published Apr 8, 2023, 10:09 PM IST

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமர் மோடியை சந்திக்க இருந்த நிலையில், சந்திப்பு ரத்தாகி உள்ளது.


சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். 

இதனைத் தொடர்ந்து ரூ. 1, 260 கோடியில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.இதன்பிறகு, ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் விமானப்படை தளம் வந்தார். அங்கிருந்த சாலை வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார்.

Tap to resize

Latest Videos

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை - கோயம்புத்தூர் இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பல்லாவரம் ஆல்ஸ்ட்ராம் கிரிக்கெட் மைதானத்தில் அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. முதல்வர் மு.க ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். பிறகு விழாவை முடித்துவிட்டு கிளம்பினார் பிரதமர் மோடி.

இதையும் படிங்க..முக்கிய புள்ளியை தட்டி தூக்கிய பாஜக..காங்கிரஸ் அப்செட்! யாரு தெரியுமா? ராஜாஜி கொள்ளுப்பேரன் தான் அது !! 

இந்த நிலையில் விமான நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. தமிழக பாஜக மற்றும் அதிமுக கூட்டணி என்னவாகும் என்ற கேள்வி, எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்ச்செல்வம் இடையேயான ஒற்றுமை போன்றவை பற்றி பிரதமருடன் விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டது. 

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமர் மோடியை சந்திக்க இருந்த நிலையில், சந்திப்பு ரத்தாகி உள்ளது. எதனால் இச்சந்திப்பு ரத்தானது என்று தெரியவில்லை. பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் இது பெரும் விரிசலை ஏற்படுத்துமா ? என்று கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை பாஜக தலைமை அதிமுக மீது அதிருப்தியில் இருக்கிறதா ? என்ற சந்தேகமும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க..திருக்குறள் கருத்து.. ஹீரோ விவேகானந்தர்.! அடுத்த 25 வருஷம் பிளான் இதுதான் - மாஸ் காட்டிய பிரதமர் மோடி

இதையும் படிங்க..ஸ்டாலினை பாராட்டிய எல்.முருகன்.. முகத்தை திருப்பிய பிரதமர் மோடி - அண்ணாமலைக்கு என்ன தான் ஆச்சு.!

click me!