பெரியார் வாழ்க.. மோடி வாழ்க.! திமுக- பாஜக தொண்டர்களின் போட்டி முழக்கத்தால் பதற்றமான அரங்கம்

By Ajmal Khan  |  First Published Apr 8, 2023, 7:17 PM IST

பிரதமர் மோடி கலந்து கொண்ட பல்லாவரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மோடி வாழ்க என பாஜகவினரும், பெரியார் வாழ்க என திமுகவினரும் மாறி, மாறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


 சென்னையில் மோடி

ஐதராபாத்திலிருந்து  இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் இன்று மதியம் சென்னை விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடியை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் ரூ.1260 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். தொடர்ந்து சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற சென்னை- கோவை இடையிலான வந்தே பாரத் திட்டத்தையும் மோடி தொடங்கிவைத்தார். 

Tap to resize

Latest Videos

சென்னை வந்த மோடி..! வரவேற்க வராத அண்ணாமலை.? காரணம் என்ன.? எங்கே சென்றார் மாநில தலைவர்.?

புதிய ரயில் திட்டம் தொடக்கம்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமருக்கு வழி நெடுக பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனை தொடரந்து பல்லாவரத்தில் உள்ள அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை, திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 2 வழித்தடங்களிலுமான பயணிகள் ரெயில் சேவை, மதுரை- செட்டிகுளம் இடையே 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் (என்.எச்.785), நத்தம்-துவரங்குறிச்சி இடையேயான (என்.எச்.785) 4 வழிச்சாலை திட்டம் ஆகியவற்றை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

திமுக- பாஜக மோதல்.?

இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்னதாக விழா அரங்கில் திமுக மற்றும் பாஜகவினர் அதிகளவில் கூடியிருந்தனர். அப்போது விழா மேடை அருகே பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வந்தார். அவரை வரவேற்கும் விதமான பாஜகவினர் பாரத் மாத கீ ஜெ எனவும், மோடி வாழ்க எனவும் முழக்கம் எழுப்பினர். இதறகு போட்டியாக திமுகவினர் பெரியார் வாழ்க, ஸ்டாலின் வாழ்க என போட்டி முழுக்கமிட்டனர். இதன் காரணமாக அந்த இடத்தில் பரபரப்பான சூழ்நிலை உருவானது. ஒருவருக்குள் ஒருவர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. அப்போது விழா மேடைக்கு முதலமைச்சர் வந்து கொண்டிருந்தார். இதைனயடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அமரவைத்தனர். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்

வந்தே பாரத் ரயில் கட்டணத்தை குறையுங்க..மக்கள் பாவம்! பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்த முதல்வர் ஸ்டாலின்

click me!