ஸ்டாலினை பாராட்டிய எல்.முருகன்.. முகத்தை திருப்பிய பிரதமர் மோடி - அண்ணாமலைக்கு என்ன தான் ஆச்சு.!!

By Raghupati R  |  First Published Apr 8, 2023, 9:04 PM IST

பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக சாலையின் இருபுறங்களிலும், அன்பின் மிகுதியில் பொதுமக்களும், பாஜக கட்சியின் தொண்டர்களும் சிறப்பான வரவேற்பை பிரதமருக்கு அளித்தனர்.


சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.

பின்னர், சாலை வழியாக சர்வதேச சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அவரை ஆளுநர் ஆர். என். ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். இதன்பிறகு, ரூ. 1, 260 கோடி மதிப்பில் 1. 36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

Tap to resize

Latest Videos

பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக சாலையின் இருபுறங்களிலும், அன்பின் மிகுதியில் பொதுமக்களும், பாஜக கட்சியின் தொண்டர்களும் சிறப்பான வரவேற்பை பிரதமருக்கு அளித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும், அதனால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்றும் பாஜக முன்னணி தலைவர்கள் தெரிவித்தனர்.

பல்லாவரம் ஆல்ஸ்ட்ராம் கிரிக்கெட் மைதானத்தில் அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய  மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “தமிழகத்தின் மீது பிரதமரின் தனிப்பாசத்தால் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 9 புதிய ரயில் தடங்களை பிரதமர் தமிழகத்திற்கு கொடுத்திருக்கிறார். மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்துகிறார். 

தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடி அன்பை வைத்துள்ளதால் பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளார். சீரும் சிறப்புமாக தமிழகத்தை வழிநடத்தி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்தாண்டு மட்டும் 6 ஆயிரம் கோடிக்கு ரயில்வே திட்டங்களை அறிவித்துள்ளார் பிரதமர்” என்று பேசினார். சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் புதிய முனையம் அமைத்ததுத் தந்ததற்கு நன்றி. சென்னை - மதுரை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க வேண்டும்.

அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும்.  சென்னை- மதுரவாயல், சென்னை- தாம்பரம் உயர்மட்ட சாலைகள், கடற்கரை சாலைகளை நான்கு வழிச்சாலை பணிகளை விரைவுப்படுத்து வேண்டும். சென்னை- மதுரை நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.சிறந்த சாலை கட்டமைப்பு கொண்ட மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை.

இதையும் படிங்க..திருக்குறள் கருத்து.. ஹீரோ விவேகானந்தர்.! அடுத்த 25 வருஷம் பிளான் இதுதான் - மாஸ் காட்டிய பிரதமர் மோடி

தமிழ்நாட்டின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சிக்கு பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளோம் மக்களுக்கு நெருக்கமானவை மாநிலங்கள் என்பதால் அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் கடமை மாநில அரசுக்கு உள்ளது. மாநிலங்களின் நிதி தேவை மாநில மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு தேவை.

ஒன்றியத்தில் உண்மையான கூட்டாட்சி இருக்க வேண்டுமானால் மாநிலத்தில் சுயாட்சி இருக்க வேண்டும். சமூக வளர்ச்சி திட்டங்களோடு உள் கட்டமைப்பையும் தமிழ்நாடு அரசு சீர் செய்துவருகிறது.கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் ” என்று கோரிக்கையை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..வந்தே பாரத் ரயில் கட்டணத்தை குறையுங்க..மக்கள் பாவம்! பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்த முதல்வர் ஸ்டாலின்

இதையும் படிங்க..முக்கிய புள்ளியை தட்டி தூக்கிய பாஜக..காங்கிரஸ் அப்செட்! யாரு தெரியுமா? ராஜாஜி கொள்ளுப்பேரன் தான் அது !!

click me!