2024-ல் ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்... பாஜக எம்.பி.க்களுக்கு இப்போதே பிரதமர் மோடி அறிவுரை!

Published : Aug 05, 2019, 07:43 AM IST
2024-ல் ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்... பாஜக எம்.பி.க்களுக்கு இப்போதே பிரதமர் மோடி அறிவுரை!

சுருக்கம்

ஒரு தொகுதியில் எம்.பி.யாகிய நீங்கள், அத்தொகுதியின் அனைவருடைய நலனுக்காகவும் செயலாற்ற வேண்டும். பாஜகவுக்கு ஓட்டுப் போட்டவர்கள், போடாதவர்கள் எனப் பிரித்து பார்க்கக் கூடாது. 

பாஜகவுக்கு வாக்களிக்காதவர்களின் ஆதரவையும் பெற வேண்டும் என்று அக்கட்சியின் எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு 2 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் எம்.பி.களின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும், மக்களின் ஆதரவைப் பெற என்னென்ன செய்ய வேண்டும் என்றெல்லம் அறிவுரை வழங்கி பேசினார்.


 “ஒரு தொகுதியில் எம்.பி.யாகிய நீங்கள், அத்தொகுதியின் அனைவருடைய நலனுக்காகவும் செயலாற்ற வேண்டும். பாஜகவுக்கு ஓட்டுப் போட்டவர்கள், போடாதவர்கள் எனப் பிரித்து பார்க்கக் கூடாது. அப்படி ஒரு எதிர்மறை எண்ணம் உங்களுக்கு ஏதாவது இருந்தால் அதை விட்டுவிடுங்கள். உங்களுடைய பணி, செயல்பாடு ஆகியவற்றைப் பார்த்து ஓட்டுப் போடாதவர்களும் உங்களுக்கு நெருக்கமாவார்கள். அவர்களுடைய ஆதரவையும் பெறுவதன் மூலமே உங்களுடைய தொகுதிகளை 2024-ம் ஆண்டு தேர்தலிலும் தக்கவைத்துக் கொள்ள முடியும்.” என்று மோடி பேசினார்.

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை