ரூ. 5,010 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி..!

By vinoth kumarFirst Published Mar 6, 2019, 5:28 PM IST
Highlights

தமிழகத்தில் ரூபாய் 5,010 கோடியில் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட் டபல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 

தமிழகத்தில் ரூபாய் 5,010 கோடியில் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட் டபல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 

தனி விமானம் மூலம் சென்னை விமானம் நிலையம் வந்து இறங்கிய பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிளாம்பாக்கம் வந்தடைந்தார். அங்கு நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ரூபாய் 5,010 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள எண்ணூர் திரவ எரிவாயு முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

மேலும் தமிழகத்தில் ரூ.5,101 கோடியில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் 2 வழிச்சாலை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 32 கிலோ மீட்டர் தூர நான்கு வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அதேபோல் ஈரோடு-கரூர்-திருச்சி மற்றும் சேலம்- கரூர் -திண்டுக்கல் மின்மயமாக்கல் ரயில் பாதை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. இதுதவிர சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சிலையையும் அவர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

click me!