அதிமுக கூட்டணியுடன் பேசிக்கொண்டு இருக்கும் போதே திமுக கூட்டணியில் தேமுதிக இணைய தூது விட்டது. இந்நிலையில், இந்த தேமுதிகவின் வேண்டுகோள் குறித்து பரிசீலிக்கலாம். ஆனால், அவர்களுக்கு தருவதற்கு சீட் இல்லை? என்று திமுக தொகுதி பங்கீட்டுக் குழுத் தலைவரும், அகட்சியின் பொருளாளருமான துரைமுருகன் கூறியிருக்கிறார்.

அதிமுகவுடன் கூட்டணி உடன்பாட்டை தேமுதிக எட்டிவிடும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருருந்த அதேவேளை திமுகவுடனும், தேமுதிக தனது கட்சி நிர்வாகிகளை துரைமுருகனிடம் அனுப்பியது தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள திமுக பொருளாளரும், தொகுதிப் பங்கீட்டுக் குழு தலைவருமான துரைமுருகன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தேமுதிகவைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களான அனகை முருகேசன், மற்றும் இளங்கோவன் ஆகியோர், துரைமுருகனை சந்தித்துப் பேசினர்.
அப்போது, திமுக மூத்த தலைவர்கள் ஜெகத்ரட்சகன், எம்எல்ஏ காந்தி ஆகியோர் உடனிருந்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிக நிர்வாகிகள் என்னை சந்திக்க வந்தனர். சந்திக்க வந்த தேமுதிக நிர்வாகிகளிடமும் கொடுக்க சீட் இல்லை என்று கூறிவிட்டேன்.
திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவடைந்து தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதால், ஒரு தொகுதி கூட ஒதுக்க வாய்ப்பில்லை எனக் கூறி அனுப்பினேன். அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலக உள்ளதாக சுதீஷ் என்னிடம் தெரிவித்தார். தேமுதிகவினர் அணுகியது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலிடன் கூற செல்போனில் தொடர்பு கொண்டேன். அவரது தொலைபேசி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது.
தேமுதிக கூட்டணிக்கு மீண்டும் அழைத்தாலும் எங்களிடம் சீட் இல்லை. பிறகு எப்படி பரிசீலிப்பது? கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகமாக தொகுதிகளை ஒதுக்கி விட்டு நாங்களே 20 தொகுதிகளில் தான் போட்டியிடுகிறோம். பிறகு எப்படி தேமுதிகவுக்கு ஒதுக்குவது..?’’ என அவர் தெரிவித்தார்.