இந்தியா கூட்டணியை பொறுத்தவரை பிரதமர் முகம் ஒரு பிரச்சினை இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா இன்று புதுச்சேரியில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 5 மாநில தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் 3வது முறையாக ஜெயிப்பேன் என்றும், 3வது பொருளாதார சக்தியாக இந்தியா இருக்கும் என பிரதமர் மோடி மார் தட்டுகிறார். அதே நேரத்தில் மனித வள சதவீதத்தில் குறிப்பிடும்படி இல்லை.
அம்பானி, அதானியை மட்டும் பணக்காரர்களாக மாற்றிய பொருளாதார கொள்கைகளை பாஜக விளக்க வேண்டும். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, கருப்பு பணத்தை ஒழித்து ரூ. 15 லட்சம் மக்கள் வங்கி கணக்கில் போடுவேன் என்று கூறியதை செய்தீர்களா? என மக்கள் கேட்கிறார்கள். இந்தியாவின் ஜிடிபியும் சொல்லிக்கொள்ளும் படி ஏதுமில்லை. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியயடைந்துள்ளது.
நீ எப்படி டா கேள்வி கேட்ப? விஜயகாந்த் ஸ்டைலில் விவசாயியை பாய்ந்து வந்து தாக்கிய ஊராட்சி செயலாளர்
இப்படிப்பட்ட நிலவரமும், சாதி, மதவெறியும் இருக்கிறது. 9 ஆண்டுகள் மகளிர் இட ஒதுக்கீடுக்கு பொருட்படுத்தவில்லை. உண்மையில் பல ஆண்டுகளாக கம்யூனிஸ்டுகள் போராடியிருக்கிறார்கள். பாஜகவை வீழ்த்த வேண்டும். மத நல்லிணக்கம், ஜனநாயகம் காக்கவே இந்தியா என்ற கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. பாஜகவுக்கு மாற்றாக அரசு அமைய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
எதிர்கட்சிகளை வசை பாடும் வேலையில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர். அகங்காரம் கொண்ட அணி என இந்தியா கூட்டணியை பார்த்து பிரதமர் சொல்கிறார். உண்மையில் பாஜக மக்கள் நல அரசாக செயல்படவில்லை. சமூக நீதியை கடைபிடிக்கும் அரசாக இல்லை. கூட்டாட்சி நெறிமுறையை ஏற்க வேண்டுமென அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் அம்பேத்கர் கூறியிருக்கிறார்.
ஆனால் பாஜக நேர்மாறாக மாநில உரிமைகளை பறிக்கிறது. மாநிக அரசுகளை பொறுப்பாக கொள்ளாமல் புதிய கல்வி கொளையை திணிக்கிறது. மாநில உரிமைகள், கூட்டாட்சி நெறிமுறைகள் மீறப்படுகிறது. தற்போது நிலை தடுமாறி பாஜக நடுக்கம் கொண்டு பேசுகிறார்கள். இந்தியாவை காக்க பாஜகவை அகற்ற வேண்டும். மத நல்லிணக்கம், இந்து முஸ்லீம் ஒற்றுமை, எளியவர்கள் காக்க பாஜக அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்தியா கூட்டணி கட்சிகள், மாநில அளவில் பேச்சு தொடங்கியிருக்கிறார்கள். அதன் பேச்சுவார்த்தைகளை விரைந்து முடிக்க வேண்டும். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு மாநில கட்சிகள் சில வற்றை விட்டுக்கொடுத்து செல்லவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணிக்குள் தொகுதி பிரச்சினை போன்றவைகள் செய்திகளாகத் தான் இருக்கிறது. எல்லாம் பேச்சுவார்த்தையில் தான் இறுதி முடிவாக இருக்கும்.
பாஜகவை விட்டு விலகுவதும், உடலில் கொள்ளிகட்டையை வைப்பதும் ஒன்று தான்; பழனிசாமிக்கு தினகரன் எச்சரிக்கை
கள நிலவரம் பிரதமர் மோடிக்கு சாதகமாக இல்லை. அதனால்தான், எதிர்கட்சிகளை வசைபாட ஆரம்பித்துவிட்டார். குறைந்த பட்ச செயல்திட்டம் தேர்தலுக்கு பிறகு கொண்டுவரப்படலாம். காவிரி நதி நீர் தொடர்பான பிரச்னை, மாநில அரசுகள் பொறுப்பாக செயல்பட வேண்டும். பாதிப்பு இல்லாமல் நதி நீர் பங்கீட்டினை தீர்த்துக்கொள்ள வேண்டும். பிரதமர் முன்னிறுத்தி, தேர்தலை சந்தித்தது இல்லை. இந்தியா கூட்டணி வெற்றிப்பெற்ற பிறகு கூடி பேசி இறுதி முடிவு எடுக்கப்படும். பிரமர் முகம் ஒரு பிரச்னை இல்லை. அது தேர்தல் வெற்றிக்கு பிறகு கூட்டான முடிவாக இருக்கும் என்றார்.