பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு…. வழக்கம் போல் மாணவிகளே சூப்பர் !!

Asianet News Tamil  
Published : May 16, 2018, 10:31 AM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு…. வழக்கம் போல் மாணவிகளே சூப்பர் !!

சுருக்கம்

plus 2 result announced today

தமிழகம் மற்றும் புதுச்சேரி  ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று  இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 91.1 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.1 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6–ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர். மாணவர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர். வழக்கம் போல மாணவிகள் தான் அதிகம். தனி தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர்.

அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் சான்றிதழில் பதிவு செய்யும் பணி நடந்தது. மீண்டும் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது.இந்நிலையில் இன்று பிளஸ் 2 தேர்வு முடியுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன… அதன்படி, பிளஸ் டூ பொதுத்தேர்வில் மொத்தம் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவிகள் 94.1 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்

மேலும் மாவட்டங்களின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டம் 97 சதவீத தேர்ச்சி பெற்று தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. ஈரோடு மாவட்டம் 96.3 சதவீதம் பெற்று இரண்டாவது இடத்தையும், திருப்பூர் மாவட்டம் 96.1 சதவீதம் பெற்று மூன்றாவது இடத்தையும் அடைந்துள்ளது.

ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதத்தை பார்க்கையில், சென்ற ஆண்டை (92.1 சதவீதம்) விட 1 சதவீத தேர்ச்சி குறைந்துள்ளது.

பாடவாரியாக தேர்ச்சி விகிதம்

மொழிப்பாடம் - 96. 85

ஆங்கிலம் - 96.97

இயற்பியல் - 96.44

வேதியியல் - 95.02

உயிரியல் -96.34

தாவரவியல் -93.96

விலங்கியல் - 91. 99

புள்ளியியல்- 98.31

கணிப்பொறி அறிவியல் - 96.14

புவியியல்- 99.21

நுண் உயிரியல்-98.96

உயிர் வேதியியல்-98.53

நர்சிங்-97.86

நியூட்ரிசியன் மற்றும் டையடிக்ஸ்-99.87

கம்யூனிகேட்டிவ் இங்கிலீஸ்-98.09

கணிதம் - 96.19

ஹோம் சயின்ஸ் - 99.78

வரலாறு - 89.19

பொருளியல் - 90.94

பொருளாதார அரசியல் - 89.57

வணிகவியல் - 90.31

கணக்கு பதிவியியல் - 91.02

இந்திய கலாசாரம் - 96.08

அட்வான்ஸ்ட் மொழிப்பாடம்-91.89

வணிக கணிதம்-95.99

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!