
குமாரசாமி முதல்வர் ஆவதற்கு கர்நாடகா பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. 38 இடங்களை மட்டுமே வென்ற மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தேவகவுடாவை பிரதமர் பதவி தானாக தேடி வந்தது போல, மகனுக்கும் முதல்வர் பதவி தானாக தேடி வந்துள்ளது. வெறும் 38 இடங்களை மட்டுமே பிடித்த குமாரசாமிக்கு ராஜயோகம் அடித்துள்ளது.
தேசிய அரசியலை பொறுத்தவரை முன்னாள் பிரதமர் தேவகவுடா தவிர்க்க முடியாத புள்ளியாக கருதப்படுகிறார். அதுபோல் மாநில அளவில் தான் ஒரு தவிர்க்க முடியாத நபர் என்பதை குமாரசாமி பலமுறை நிரூபித்துள்ளார். மாநகராட்சி தேர்தல் என்றாலும், பஞ்சாயத்து தேர்தல் என்றாலும் பதவி யாருக்கு என்பதை குமாரசாமி நிர்ணயம் செய்கிறார். கடந்த மாநகராட்சி தேர்தலில் பாஜவுக்கு 101 இடங்களில் வெற்றி கிடைத்தாலும் காங்கிரஸ் கட்சி மஜதவின் ஆதரவை நாடியது.
தற்போது நடந்து முடிந்த தேர்தலிலும் பாஜவுக்கு 104 இடத்தில் வெற்றி கிடைத்தாலும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனியாக ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜகவினர் அந்த மேஜிக் நம்பரை கைப்பற்றுவது எப்படி என்று கையை பிசைந்து கொண்டிருந்தனர். இதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட காங்கிரசார், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் கதவை தட்டினர்.
சட்டசபை தேர்தலில் 38 இடத்தில் மஜதவுக்கு வெற்றி கிடைத்தாலும் காங்கிரசின் நிபந்தனை இல்லாத ஆதரவின் காரணமாக மாநில முதல்வராகும் வாய்ப்பு குமாரசாமியின் வீட்டு வாசல் கதவை தட்டியுள்ளது. ஆட்சி அமைப்பதற்காக ஏற்கனவே மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருந்தது நிலையில் இதனை முறியடிக்க பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தனது அடுத்த அதிரடியை தொடங்கியுள்ளார்.
அதாவது குமாரசாமி முதல்வர் ஆவதற்கு கர்நாடகா பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. தற்போது பாஜக தரப்பிலிருந்தும் முதல்வராவதற்கு ஆதரவு கிடைத்துள்ளதால் எந்த கட்சியின் ஆதரவை பெறுவது என்று குமாரசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.