
தன் மீது காலணி வீச முயன்றவருக்கு புதிய காலணி வாங்கித் தருமாறு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மர்ம்மான முறையில் உயிரிழந்த சேலம் மாணவர், முத்துக்கிருஷ்ணனின் உடல் இன்று அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
அந்த வரிசையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது காலணியை வீச முயன்றார்.ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்தக் காலணி செய்தியாளர்கள் வைத்திருந்த மைக்குகளின் மேல் பட்டு கிழே விழுந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே தன் மீது காலணி வீச முயன்ற அந்த நபருக்கு புது காலணி வாங்கித் தருமாறு பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.