அப்பவும் தண்ணியில நின்னாரு இப்பவும் தண்ணியில நிற்கிறாரு - ஸ்டாலினை நக்கல் அடித்த பியூஸ் மனுஸ்.

By Ezhilarasan BabuFirst Published Nov 8, 2021, 12:08 PM IST
Highlights

அதிகாரிகளுக்கு எப்போதும் கூலைக்கும்பிடு போட்டால் தான் பிடிக்கும், ஊழல் செய்கிறீர்கள் என்று சொன்னால் அவர்களால் தாங்க முடியாது, கொதிக்கிறார்கள், நாங்கள் சரி செய்து வைத்த ஏறிய கூட இப்போது சேலம் நிர்வாகம் சீரழித்து வருகிறது.

சென்னை இந்த நிலைக்கு தள்ளப்பட்டதற்கு அதிகாரிகள்தான் காரணம் என்றும், முதல்வர் ஸ்டாலின் மேயராக இருந்த போதும் தண்ணீரில் நின்றார், எதிர்கட்சித் தலைவராக இருந்த போதும் தண்ணீரில் நின்றார், முதலமைச்சராக பிறகும் தண்ணீரில் நிற்கிறார் இது என்ன கொடுமை சார் என்று விமர்சித்துள்ள சுற்று சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் முதலமைச்சருக்கு பரபரப்பு கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, 

சென்னையில் மழை வெளுத்து வாங்குகிறது, கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது அதை அடித்து, 2016 ஆம் ஆண்டு ஒரு மூன்று சக்கர வாகனத்தில் நீர் மேலாண்மையை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அது தொடர்பாக அதிகாரிகளை சந்திப்பதற்காக நான் பயணம் மேற்கொண்டேன், மழை பெய்து பூமிக்கு வந்து பிறகு அது கடலில் கலந்து பிறகு  நீராவியாக வானத்திற்கு சென்று மீண்டும் மழையாக பெய்கிறது. ஆனால் இந்த சுழற்சியை நம்மால் ஏன் மேலாண்மை செய்ய முடியவில்லை என்ற கேள்வியுடன் இந்த பயணத்தை மேற்கொண்டேன், நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அப்புறப் படுத்துங்கள் என்று நான் வலியுறுத்தினேன், சேலத்தில் இருந்து புறப்பட்டு தர்மபுரி, வேலூர், காஞ்சிபுரம், சென்னை என மாவட்ட ஆட்சித் தலைவர்களின் சந்தித்தேன், ஆனால் அப்போது நான் சொல்வதை யாரும் காது கொடுத்து கேட்கவில்லை, என்னை ஒரு மாவட்ட ஆட்சியர்கள் கூட மனிதனாகவே மதிக்கவில்லை, சைக்கிளில் வருபவனை எல்லாம் எதற்கு சந்திக்க வேண்டும் என்ற மன நிலையில் அவர்கள் இருந்தார்கள். 

அப்போது ஒரு அதிகாரி என்னிடத்தில் கூறினார், 2015ல் வந்த மழை 100 வருடத்திற்கு பிறகு வந்திருக்கிறது எனவே மீண்டும் இதுபோன்ற ஒரு வெள்ளம் வர 100 வருடங்கள் ஆகும், எனவே 100 வருடம் கழித்து அதை பார்த்துக் கொள்ளலாம் என பதில் கூறினார். அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் இயற்கையை இப்படி எல்லாம் யாரும் மதிப்பிட முடியாது, இப்படிப்பட்ட அதிகாரிகளை என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை, இவர்களெல்லாம் கலெக்டராக வேண்டும் என்பதற்காக அதிகம் கோச்சிங் கிளாஸ் சென்று அதை மனப்பாடம் செய்து மார்க் எடுத்து விட்டு வந்தவர்கள், அவர்களுக்கு இயற்கை மேலாண்மை குறித்து என்ன தெரியும்.? சேலம் மூக்கனூர் ஏரிக்கரையின் மீது பட்டா போட்டு கொடுத்துள்ளார்கள், இப்படி எல்லாம் அதிகாரிகள் அராஜகம் செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு நீர் மேலாண்மை குறித்து எந்த அறிவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த அதிகாரிகளுக்கு காடு பற்றியும் மலை பற்றியும் கடலைப் பற்றியும் மழைபற்றியும் நீர் நிலைகள் பற்றியும் என்ன புரிய போகிறது, ஆனால் அதைப் பற்றி தெரிந்தவர்கள் எதைச் சொன்னாலும் அவர்கள் காதுகொடுத்து கேட்கவும் மாட்டார்கள், இப்படியே போனால் இன்னும் அதிகம் வெள்ளம் வரும், அப்போதும் அவர்கள் கேட்க மாட்டார்கள், இப்போதுள்ள திமுக அரசாங்கத்தையும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து பேசுகிறேன், இந்த அரசாங்கம் கடந்த மே மாதத்தில் தான் ஆட்சிக்கு வந்தது,

ஆனால் ஸ்டாலின் அவர்களை பொறுத்தவரையில் அவர் மேயராக இருக்கும்போதும் தண்ணீரில் நின்றார், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் தண்ணீரில் நின்றார், இப்போது முதல்வர் ஆகியும் அவர் தண்ணீரில் நிற்கிறார், ஐயா தண்ணீர் என்பது பூமிக்கு கீழே இருக்க வேண்டும், தண்ணீர் பூமிக்கு மேல் இருக்கக்கூடாது பூமிக்கு கீழே இருப்பதுதான் அதற்கு அழகு, நமக்கு உயிர் கொடுக்கும் தண்ணீர் நமக்கு கீழே இருக்க வேண்டும் நாம் அதன் மீது நிற்கிறோம் இதெல்லாம் கூடவா உங்களுக்கு தெரியாது, இன்னும் இரண்டு நாட்கள் மழை இருக்கிறது என்று சொல்லுகிறார்கள் மழை பெய்யக் கூடாது என்று நாம் வேண்டிக் கொள்வோம், மனதார சொல்கிறேன் இன்னும் இரண்டு நாளைக்கு மழை வந்தால் சென்னை மிகவும் மோசமான பாதிப்பை சந்திக்கும், இப்போது செய்யவில்லை என்றாலும், செய்யாவிட்டாலும் அட்லீஸ்ட் இந்த ஆண்டில் இருந்தாவது எங்களைப்போன்ற மக்களுடன் இணைந்து நீங்கள் பணி செய்தால் போதும், தயவுசெய்து சம்பளத்துக்கு இருக்கிற அதிகாரிகளை நம்பாதீர்கள், சம்பள வாங்கும் அதிகாரிகள் உண்மையாக வேலை செய்வார்களா, வாய்ப்பே இல்லை, நீர் மேலாண்மை எப்படி கையாள வேண்டும், அதற்கான தீர்வு என்ன என்பது மிக எளிது, ஒவ்வொரு ஏரிக்கு 40 கோடி 50 கோடி செலவழித்து கொண்டிருக்கிறீர்கள், சேலம் வந்து பாருங்கள் வெறும் 2 கோடியில் 7 நீர்நிலைகளை எப்படி சீரமைத்து இருக்கிறோம் என்னிடம் வாருங்கள், நீர்மேலாண்மை என்ன என்று நாங்கள் காண்பிக்கிறோம். 

அதிகாரிகளுக்கு எப்போதும் கூலைக்கும்பிடு போட்டால் தான் பிடிக்கும், ஊழல் செய்கிறீர்கள் என்று சொன்னால் அவர்களால் தாங்க முடியாது, கொதிக்கிறார்கள், நாங்கள் சரி செய்து வைத்த ஏறிய கூட இப்போது சேலம் நிர்வாகம் சீரழித்து வருகிறது. நீர் மேலாண்மை திட்டம் குறித்து நான் கேட்கும் கேள்விக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முறையாக பதில் கொடுங்கள், இல்லை என்றால் நான் பிரச்சினை செய்வேன், இதை ஒருபோதும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள், எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது, எல்லாம் உயிரை கையில் பிடித்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள், என்ன நிலைமை என்று உங்களுக்கு புரியாது, நீங்கள் எல்லாம் அதிகாரிகள், நீங்கள் புத்தகத்தைப் படித்துவிட்டு வந்தவர்கள், நாங்கள் பிராக்டிகலாக வேலை செய்பவர்கள், நாங்கள் சொல்வதை தயவுசெய்து கேளுங்கள், மக்களாகிய நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம் அதை செய்வது உங்கள் கடமை, திமுக ஆட்சிக்கு ஆறு மாத காலம் முடிந்துவிட்டது, இன்னும் நாலரை ஆண்டு காலம் இருக்கிறது, அதற்குள் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள், நான் மனதார சொல்கிறேன் எங்களிடம் தயவுசெய்து கைகோர்த்து வேலை செய்யுங்கள் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். 
 

click me!