நடிகர் சிவகுமார் ஒரு அப்பட்டமான சாதி வெறியர் என்றும், அதை அவர் என்னிடம் வெளிப்படையாகவே காட்டினார் என்றும், அன்றிலிருந்து அவர் மீது வைத்திருந்த மரியாதை அனைத்தும் போய்விட்டது என தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகுமார் ஒரு அப்பட்டமான சாதி வெறியர் என்றும், அதை அவர் என்னிடம் வெளிப்படையாகவே காட்டினார் என்றும், அன்றிலிருந்து அவர் மீது வைத்திருந்த மரியாதை அனைத்தும் போய்விட்டது என தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குறிப்பாக தேவேந்திரகுல வேளாளர் மக்கள் மத்தியில் இந்த தகவல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் விடுதலைக்கான அரசியலை முன்னெடுத்து வருபவர் ஜான்பாண்டியன், தென் மாவட்டங்களில் மிகவும் அறியப்பட்ட தலைவராக உள்ளார் அவர்,
இவரது கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது, தலித் மக்கள் அதிகம் கொண்ட தொகுதிகளில் ஒன்றான சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார் அவர். தனது தோல்விக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இபிஎஸ்தான் காரணம் என்றும், நான் தோற்க வேண்டும் என்பதற்காக தென்மாவட்டத்தில் வாக்கு வங்கியைப் பெற்றுள்ள என்னை சென்னை எழும்பூரில் போட்டிட வைத்தனர். மொத்தத்தில் அவர்கள் எனக்கு துரோகம் செய்து விட்டனர் என அதிமுக ஒருங்கிணைப்பாளர்களை கடுமையாக விமர்சித்தார்.
அதிலும் குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் நயவஞ்சகமாக நடந்து கொண்டார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதன் காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் அறிவித்தார். அதேபோல பட்டியல் இனத்தில் இருந்து தேவேந்திரகுல வேளாளர்களை வெளியேற்றி அரசானை வெளியிட வேண்டும் என்றும் தொடர்ந்து அவர் குரல் கொடுத்து வருகிறார். அதிமுகவில் இருந்து வெளியேறினாலும் பாஜகவில் கூட்டணி ஆதரவு என்ற நிலைப்பாட்டில் அவர் இருந்து வருகிறார். அரசியல் கட்சித் தலைவராக இருந்து வந்தாலும் பல்வேறு குற்ற வழக்குகள் அவர் மீது சாற்றப்பட்டு அதிலிருந்து விடுதலை ஆனவர் அவர், பலமுறை பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு அவைகளில் இருந்து சட்டம் போராட்டம் நடத்தி விடுதலை ஆனவர் அவர். மொத்தத்தில் சர்ச்சைக்கு பஞ்சமில்லாத அரசியல் தலைவராக அவர் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நடிகர் சிவகுமார் மீதும், அவரது குடும்பத்தார் மீதும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது சிவகுமார் மற்றும் அவரது மகன் சூர்யா, கார்த்திக் ஆகியோரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழக திரையுலகில் மிகவும் ஒழுக்கமானவர், தனிமனித ஒழுக்கத்தில் சிறந்தவர் என பார்க்கப்படுகிறார் நடிகர் சிவகுமார், அதேபோல அவரது மகன்கள் சூர்யா கார்த்திக் ஆகியோரும் தொண்டு நிறுவனம் நடத்தி ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி சேவையாற்றி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் அவரது குடும்பத்திற்கு என்று தனி மதிப்பும் மரியாதையும் இருந்து வருகிறது. இதே நேரத்தில் ஜெய்பீம் என்ற திரைப்படத்தை தயாரித்து, அதில் சூர்யா நடித்துள்ள நிலையில் சமூகநீதி கழுத்தை ஓங்கி ஒலித்துள்ள சிவகுமார் குடும்பத்தை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தென் மாவட்டங்களில் தலித் மக்களின் தலைவராக அறியப்படும் ஜான் பாண்டியன், நடிகர் சிவக்குமாரை சாதி வெறியர் என கூறியுள்ளதா பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள ஜான்பாண்டியன் கூறியிருப்பதாவது:- நடிகர் சிவகுமார் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது, ஆனால் ஒருமுறை கோவையில் இருந்து நான் விமானத்தில் வந்தேன், அப்போது அதே விமானத்தில் நடிகர் சிவகுமார், அவரது மகன் சூர்யா மற்றும் சிவகுமாரின் மனைவி ஆகியோர் எனது இருக்கைக்கு அடுத்தடுத்து அமர்ந்தனர். அப்போது என் அருகில் அமர்ந்த சிவகுமார், திடீரென எனது மகன் சூர்யாவுடன் நீங்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளக்கூடாது எனக் கூறினார். அதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ஏன் அவர் அப்படி சொன்னார் என்று எனக்கு அப்போது புரியவில்லை, ஏனெனில் நடிகர் சிவகுமாரிடத்தில் அவ்வளவு சாதிவெறி இருக்கிறது, அதனால்தான் அவரது மகனுடன் என்னைப் புகைப்படம் எடுக்கக்கூடாது என அவர் கூறினார் என்பதை பிறகு புரிந்து கொண்டேன். ஒரு தமிழ் திரை உலகில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் சிவகுமார் ஏன் இப்படி கீழ்தரமாக நடந்து கொண்டார் என தெரியவில்லை, அவர் அப்படி நடந்துகொண்டது எனது மனதில் ஆறாத காயமாக உள்ளது.
அன்றிலிருந்து அவர் மீது வைத்திருந்த அத்தனை மதிப்பும் மரியாதையும் போய்விட்டது. இதை நான் இதுவரை யாரிடமும் கூறியதில்லை, முதன்முறையாக நான் வெளிப்படையாக இதை கூறுகிறேன், என்னுடன் புகைப்படம் எடுக்க பல ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். நான் பொய் நடிகர் சூர்யாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வேனா, அவர் ஒரு நல்ல நடிகர் அவ்வளவுதான், இது மட்டுமல்ல எனது மகன், மகளுக்கு நடிகர் சூர்யா அவரது சகோதரர் கார்த்திக் என்றால் மிகவும் பிடிக்கும், அவர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள சிவக்குமாரிடம் அனுமதி கேட்டோம், அவரும் சரி என்று சொன்னார்கள், பிறகு அவர்கள் போன் எடுக்கவே இல்லை, அந்த அளவிற்கு சாதி வெறி கொண்டவர் நடிகர் சிவகுமார் எனக்கூறி ஜான்பாண்டியன் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.