திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா.. அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

Published : Nov 08, 2021, 08:48 AM ISTUpdated : Nov 08, 2021, 08:50 AM IST
திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா.. அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

சுருக்கம்

 திராவிட கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கடந்த வாரமாக சளி மற்றும் காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து, அவரும், அவரது மனைவியும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், அவரது மனைவி மோகனாவும் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்தியா உள்ளிட்ட 210க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவி கோரத்தாண்டவம் ஆடியது. இதில், பல லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதிகம் பாதிப்புகள் தினமும் பதிவாகும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இருந்தது. அதன் பின்னர் ஸ்டாலின் அரசு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் கொரோனா தொற்றை பெருமளவு கட்டுக்குள் வைக்கப்பட்டது. 

இதையும் படிங்க;- ஜெயலலிதாதான் முல்லைப் பெரியாறு காத்த அம்மணியா..? ஓபிஎஸ்ஸை டாராகக் கிழித்த துரைமுருகன்..!

குறிப்பாக நாள்தோறும் நடத்தப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை, சுகாதார பணிகள் என புயல் வேகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அரசுக்கு பலனும், மக்களுக்கு நிம்மதியையும் தந்தன. பாதிப்புகள் குறைந்து விட்டது. ஆகையால், பண்டிகை காலங்களில் உஷாராக இருக்க வேண்டும். அலட்சியம் வேண்டாம் என்று மக்களுக்கு அரசு நாள்தோறும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தன. ஆனாலும், முழுமையான அளவுக்கு கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

இதையும் படிங்க;- சி.வி.சண்முகத்திற்கு எது நடந்தாலும் அதற்கு ஸ்டாலின் தான் பொறுப்பு.. திமுகவிற்கு எதிராக எகிறும் எடப்பாடியார்.!

இந்நிலையில், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கடந்த வாரமாக சளி மற்றும் காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து, அவரும், அவரது மனைவியும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், அவரது மனைவி மோகனாவும் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

இதையும் படிங்க;- கைது செய்யப்பட்ட பில்லா ஜெகன்.. அடுத்த நொடியே அமைச்சரின் தீவிர ஆதரவாளரை தூக்கி எறிந்த திமுக.!

இது தொடர்பாக திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கி.வீரமணியும், அவரது மனைவி மோகனா இருவருக்கும் சிறிய அளவில் கொரோனா தொற்று தென்பட்ட காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சில நாட்களில் இருவரும் வீடு திரும்புவர் என்றும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்படுகின்றன எனவும் திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

50 தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கும் பாஜக.. முப்பதே ஓவர்.. கறார் காட்டும் எடப்பாடி..!
கொடநாடு வழக்கில் அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை..! திடீர் கோடீஸ்வரர்களான முக்கிய மூளைகள்..! பகீர் கிளப்பும் வழக்கறிஞர்கள்..!