பெரிய மனுஷன் கருத்துக் சொல்லும்போது கவனமாக இருக்க வேண்டாமா? ரஜினிக்கு அட்வைஸ் பண்ண பிரகாஷ்ராஜ்...

First Published Jun 5, 2018, 10:38 AM IST
Highlights
pirakashraj says Whats film kaala got to do with Kaveri issue


‘மூத்த நடிகரான ரஜினிகாந்த் ஒரு விஷயத்தில் கருத்துக் கூறும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்’ என நடிகர் பிரகாஷ் ராஜ் டிவிட்டரில் அட்வைஸ் செய்துள்ளார்.

ரஜினி நடித்துள்ள காலா திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. ஆனால், கர்நாடகாவில் திரையிடத் தடை விதித்து, அம்மாநிலத் திரைப்பட வர்த்தக சபை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் குமாரசாமியைச் சந்தித்து ரஜினி ரசிகர்கள் மனு அளித்தனர். ஆனாலும், கர்நாடக மக்கள் “காலா” வெளியாவதை விரும்பவில்லை என குமாரசாமி சொல்லிவிட்டார் .

இந்நிலையில், காலா படத்தைத் வெளியாவதற்கு ஆதரவாக, பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று ANI செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில்; “மூத்த நடிகரான ரஜினிகாந்த் ஒரு விஷயத்தில் கருத்துக் கூறும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

மேலும், ஒரு படத்தைப் பார்க்க வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஏதோ ஓர் அமைப்பு முடிவு செய்வதில் நியாயமில்லை. இதில் ரஜினிகாந்த் மட்டுமில்லை, ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பங்கெடுத்துள்ளனர். எனவே, காலாவைத் தடை செய்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், “மனிதனுக்கும் ஆற்றுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதனால்தான், காவிரி விவகாரம் குறித்துப் பேசுகையில் நாம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறோம். காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்துப் பேசும்போதெல்லாம், தமிழக மற்றும் கர்நாடக மக்களின் உணர்வுகளும் இப்படித்தான் இருக்கும். ஆனால், உணர்ச்சிவசப்படுவது மட்டுமே ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. இந்த விவகாரத்தில், இரு மாநில அரசுகளும், மத்திய அரசு மற்றும் வல்லுநர் குழுவினருடன் இணைந்து பேசி, நமது விவசாயிகளின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தச் சூழலில், காலா படத்தை வெளியாகாமல் தடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம்? ரஜினி கூறிய கருத்து நம்மைக் கடுமையாகப் பாதித்துள்ளது உண்மைதான். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டு 'காலா' படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என சில அமைப்புகள் கூறிவருகின்றன. இதுதான் கன்னட மக்களுக்கு நான் வேண்டுவது.

இந்தக் கேள்விக்கான பதில் நமக்குத் தெரியாது. எப்போதும் நமக்குத் தெரிந்ததில்லை. ஒருவேளை அந்தப் படம் வெளியாகி, அதைப் பார்க்காமல் மக்கள் புறக்கணித்தால், அப்போது நாம் தெரிந்துகொள்ளலாம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று. ஆனால், மக்கள் சார்பாக இதுபோன்ற சமூக விரோதிகள் தீர்மானிக்கிறார்கள் நமக்கு எதுவும் தெரிந்துவிடக் கூடாதென்று” என்று பதிவிட்டுள்ளார்.

click me!