இந்த சின்ன குழந்தைங்க ஏன் இப்படி பண்ணுறாங்க !!  தற்கொலை செய்து கொண்ட பிரதீபா குறித்து ரஜினிகாந்த் உருக்கம்!!

Asianet News Tamil  
Published : Jun 05, 2018, 10:12 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
இந்த சின்ன குழந்தைங்க ஏன் இப்படி பண்ணுறாங்க !!  தற்கொலை செய்து கொண்ட பிரதீபா குறித்து ரஜினிகாந்த் உருக்கம்!!

சுருக்கம்

Rajinikanth told about pradeepa told

நீட் தேர்வில் தோல்வி அடைந்தததால் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா  தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும், இது போன்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 6-ல் நடந்த நீட் தோ்வை நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் எழுதினா். தமிழ் மொழியில் சுமார் 24,720 பேர் எழுதி  இருந்தனர். தமிழகத்தில் மொத்தம் 1.7 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். இதனிடையே தேர்வு முடிவு நேற்று 12.30 மணியளவில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.  இதில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெருவலூர் பகுதியை சேர்ந்த மாணவி பிரதீபா என்பவரும் நீட் எழுதியிருந்தார். ஆனால் அவர் இந்த தேர்வில் தோல்வி அடைந்தார்.

கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா 12-ம் வகுப்பு தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதே போன்று அரசு பள்ளியில் படித்த பிரதீபா பத்தாம் வகுப்பில் 495 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற போதிலும் நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத காரணத்தினால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது குறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர்  ரஜினிகாந்த் ‘நீட் தேர்வு தோல்வியால் மாணவி உயிரிழந்தது பரிதாபத்திற்கு உரியது. இதனை தடுக்க நாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  மாணவி குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள்’ என தெரிவித்தார்.

ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு  2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!