ஐஐடி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் - வாய் மூடி மவுனம் காக்கும் எடப்பாடி... வாய்ஸ் கொடுத்த பினராயி!!

First Published May 31, 2017, 9:23 AM IST
Highlights
pinarayi demands action for iit student attack


மாட்டிறைச்சி தடைக்கு எதிராக சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் விழாவில் மாணவர் சுராஜ் தாக்கப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது. அரசின் இந்த திடீர் அறிவிப்பால் நாடு முழுவதும்  முழுவதும் சாலைகளில் மாட்டுக்கறி சமைத்து சாப்பிடும் போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன. தமிழகத்தை போராட்டக் களமாக்கியிருக்கும் மாட்டிறைச்சி அரசியல் குறித்து அதிமுக அரசு எதுவும் பேசாமல் வாயை மூடி மவுனமாக இருப்பது மக்களை எரிச்சலடைய வைத்துள்ளது.

இந்நிலையில், மாட்டிறைச்சி தடைக்கு எதிராக சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் விழாவை மாணவர்கள் நடத்தினர். இதில் பங்கேற்ற சுராஜ் என்ற மாணவரை சக மாணவர்கள் நேற்று கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

நாடுமுழுவதும் மாணவர்கள் மத்தியில் இந்த தாக்குதல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

இதனை தொடர்ந்து மாணவர் சுராஜ் தாக்கப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனத்தையும் அட்வைசும் செய்துள்ளார்.

கல்லூரி வளாகத்தில் போராட்ட, வீதிகளில் போராட்டம் என மாட்டிறைச்சி அரசியலால் தமிழகம் போராட்ட களமாகியுள்ளது. ஆனால்  முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ மாட்டிறைச்சி தடைக்கு எதிராக இதுவரை எடப்பாடி வாயே திறக்கவில்லை. கேட்டால் தீர்ப்பைப் படித்துப் பார்த்து விட்டுத்தான் பேசுவேன் என கூறியுள்ளது மேலும் எரிச்சலடைய செய்திருக்கிறது.

click me!