இரவு 11மணிக்கு டெல்லியில் இருந்து வந்த போன் கால்.. ஓபிஎஸ் மாஸ் பின்னணி.. தெறிக்க விட்ட ஆஸ்பயர் சுவாமிநாதன்.

By Ezhilarasan Babu  |  First Published Jun 23, 2022, 11:09 PM IST

எடப்பாடி பழனிச்சாமிக்கு நிர்வாகிகள் ஆதரவு இருந்தாலும் பன்னீர் செல்வத்திற்கு தொண்டர்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது என அதிமுக முன்னாள் ஐடி விங் நிர்வாகி ஆஸ்பயர் சுவாமிநாதன் கூறியுள்ளார். 


எடப்பாடி பழனிச்சாமிக்கு நிர்வாகிகள் ஆதரவு இருந்தாலும் பன்னீர் செல்வத்திற்கு தொண்டர்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது என அதிமுக முன்னாள் ஐடி விங் நிர்வாகி ஆஸ்பயர் சுவாமிநாதன் கூறியுள்ளார். மேலும்  டெல்லியின் ஆதரவு எப்போதும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒற்றை தலைமை கோரிக்கை அதிமுகவில் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றை தலைமையக, பொதுச் செயலாளர் இருக்கையில் அமர்த்த அவரது ஆதரவாளர்கள் கங்கணம் கட்டி செயல்பட்டு வருகின்றனர். இது ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் உள்ள 80 சதவீத மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றனர். இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர்த்து புதிய தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது, புதிய முடிவுகளை எடுக்க கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

அந்த உத்தரவை பெற்று உற்சாகத்துடன் இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.இந்நிலையில் இது தொடர்பாக திமுகவின் முன்னாள் ஐடி விங் நிர்வாகி ஆஸ்பயர் சுவாமிநாதன், தனியார் தொலைக்காட்சிக்கு  தொலைபேசி வாயிலாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறிய கருத்து பின்வருமாறு:- கட்சியில் நிர்வாகிகளின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்தாலும், தொண்டர்களின் ஆதரவு பன்னீர்செல்வத்துக்கு இருக்கிறது. ஏற்கனவே இரவு 11 மணிக்கு டெல்லியில் இருந்து வந்த ஒரு அழைப்பை பற்றி நான் சொல்லியிருந்தேன், எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு இருக்கிறது என டெல்லி அவருக்கு தெரிவித்துள்ளது. 

இது தற்போது நிரூபணமாகி இருக்கிறது. இல்லையென்றால் அவசரஅவசரமாக பதினோரு மணிக்கு ஒரு வழக்கை எடுத்து, 1 மணிக்கு அந்த வழக்கில் தீர்ப்பு கொடுக்கிற அளவிற்கு இது ஒன்றும் முக்கியமான வழக்கு அல்ல, இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், டெல்லி இவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், அண்ணா திமுக வலுவாக இருந்தால்தான் பாஜக வளர முடியும் என்பதை உணர்ந்தவர்களாக டெல்லி காரர்கள் உள்ளனர் என்பது நன்கு தெரிகிறது. பாஜகவின் ஆதரவு ஓபிஎஸ்-க்கு என்றும் உள்ளது, அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

click me!