ரவுடி கருக்கா வினோத் மீது 7 வழக்குகள் இருப்பதாகவும் முதல்நாள் தான் அவன் பிணையில் வெளிவந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இத்தகைய ரவுடிக்கு தமிழகத்தில் சுலபமாக ஜாமீன் கிடைக்கிறது என்பதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எத்தகைய சீர்குலைவை அடைந்துள்ளது என்பது புரியும்.
ஒரு ரவுடியின் அராஜக செயலுக்கு காரணம் வெளியிடும் அளவிற்கு காவல்துறை துரிதமாக செயல்படுவது வேடிக்கையானது என காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கவர்னர் அவர்கள் ஆரியம், திராவிடம் என்பது எங்கும் இல்லை. நாடு விடுதலையான நாளை துக்க நாளாக அறிவித்தவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். பள்ளி படிப்பை கூட முடிக்காத தற்குறி கால்டுவெல் தான் திராவிட சித்தாந்திகள் தூக்கி பிடிக்கும் அறிவாளி என்ற கருத்துக்களை மருது பாண்டியர் நிகழ்வில் பேசினார். இதற்கு திமுக எம்.பி. டி.ஆர். பாலு அவர்கள் தமிழக கவர்னரை அநாகரிகமாக விமர்சனம் செய்து இருந்தார். நேற்று முன்தினம் மாலை ரவுடியான கருக்கா வினோத் கவர்னர் மாளிகை மீது இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளான். நல்ல வேளையாக அவை தீப்பற்றி வெடிக்கவில்லை.
இதையும் படிங்க;- சாலையில் போகிற போக்கில் எவனோ பெட்ரோல் குண்டு வீசியதற்கு நாங்க என்ன பண்ண முடியும்.. அமைச்சர் ரகுபதி..!
அப்படி ஏதாவது நடந்து இருந்தால் அங்கு பணியில் இருந்த காவலர்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அந்த ரவுடி கருக்கா வினோத் மீது 7 வழக்குகள் இருப்பதாகவும் முதல்நாள் தான் அவன் பிணையில் வெளிவந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இத்தகைய ரவுடிக்கு தமிழகத்தில் சுலபமாக ஜாமீன் கிடைக்கிறது என்பதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எத்தகைய சீர்குலைவை அடைந்துள்ளது என்பது புரியும். மேலும் முதல் நாள் வந்தவன் மீண்டும் குற்ற செயலில் ஈடுபடும் தைரியம் எங்கு இருந்து வருகிறது. பத்து நாட்களில் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற தைரியம் தானே? மேலும் அந்த ரவுடி பெரிய சமூக அக்கறை உள்ளவன் போல சித்தரிக்கப்பட்டு அதாவது கவர்னர் குற்றவாளிகளை விடுதலை செய்யும் தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை என்று ஒரு செய்தியும், தமிழக கவர்னர் நீட் தேர்வு ரத்து செய்யக் கொடுத்த தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை என்ற கோபத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் செய்தி வெளியாகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
காவல்துறை ஆளும்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஒரு ரவுடியின் அராஜக செயலுக்கு காரணம் வெளியிடும் அளவிற்கு காவல்துறை துரிதமாக செயல்படுவது வேடிக்கையானது. இத்தகைய போக்கு காவல்துறையின் கண்ணியத்திற்கு இழுக்கு என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்டுகிறது. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஆளும் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசுவது நடந்து வருகிறது. இது ஒருவகையான பாசிச மனநோய். எதிர் கருத்து தெரிவிப்பவர்கள் மீது தாக்குதல் நடக்கும் என்ற பயத்தை உருவாக்க இதுபோல் நடத்தப்படுகிறது என்பது வெளிப்படையான உண்மை. அதுமட்டுமல்லாது மேலும் ஒரு அநாகரிகமான செயலை ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க;- ஆளுநர் மாளிகையிலே ஒருத்தன் குண்டு வீசுறானா.. தனி ஆளாக செய்திருக்க வாய்ப்பே இல்லை; என்ஐஏக்கு மாத்துங்க! வானதி
அது சமூக வலைதளங்களில், பொது கூட்டங்களில் திமுக அரசை அமைச்சர்கள் செயல்பாட்டை ஜனநாயக ரீதியில் விமர்சனம் செய்தாலே குறைந்தது ஐந்து பிரிவுகளில் வழக்கு போடுவதும் அதில் ஜாமினில் வெளிவர முடியாத இரண்டு பிரிவுகளில் வழக்கு போட்டு சிறையில் தள்ளுகிறது காவல்துறை. அதேசமயம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறை திமுகவினரின் மனம் குளிர அவர்கள் புகார் மீது நடவடிக்கை எடுப்பதே தலையாய கடமையாக நினைத்து செயல்படுகிறது என்பது வேதனையான உண்மை. தமிழகத்தில் உச்சபட்ச பாதுகாப்பு உள்ள இடத்தில் இதுபோன்ற வன்முறை செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. காவல் நிலையங்களில் நீதிமன்றங்களில் அரசு அலுவலகங்களில் தொடர்ந்து வன்முறை தாக்குதல் நடத்தப்படுவது கவலை அளிக்கும் விஷயம். எனவே இது போன்ற வன்முறை செயலில் ஈடுபடும் சமூகவிரோதிகள் மீது காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார்.