அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை.. அவரை பார்த்து நாங்கள் தான் சிரிக்க வேண்டும்..! இறங்கி அடித்த கடம்பூர் ராஜூ

கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் அதிமுக பேசி இருக்கலாம் , கூட்டணி முடிவாகி இருக்கலாம், ஆனால் அதை தற்போது வெளியில் சொல்ல முடியாது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 


அதிமுக- பாஜக மோதல்

எடப்பாடி பழனிசாமி தான் பிரதமர் வேட்பாளர் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருப்பது. சிரிப்பு தான் எனது பதில் என சிரித்தபடி அண்ணாமலை பதிலளித்தார். பிரதமர் பதவிக்கு என மரியாதை உள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் கனவு இருக்கலாம். மூன்றாவது முறையாக மோடி தான் பிரதமர் வேட்பாளர். தமிழர் ஒருவர் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்றால், அதற்கு தமிழகத்தில் பாஜக ஆட்சி வர வேண்டும் என அண்ணாமலை கூறினார்.

Latest Videos

அண்ணாமலையின் இந்த கருத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  அதிமுக சார்பில் பூத்து கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். 

ஓபிஎஸ்- பாஜக கூட்டணி

அப்போது பாஜகவுடன் சசிகலா ஓபிஎஸ் டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், இது அவர்களின் உரிமை, யாரும் யாருடனும் கூட்டணி சேரலாம், நாங்கள் மக்களை நம்புகிறோம். அதிமுக தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமையும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெரிவித்துள்ளார். கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசி இருக்கலாம் , கூட்டணி முடிவாகி இருக்கலாம், ஆனால் அதை தற்போது சொல்ல முடியாது. அதிமுக தலைமையில் அமையக்கூடிய மெகா கூட்டணி தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என தெரிவித்தார். 

அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை

எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் வேட்பாளர் என  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்துக்கு , பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கிண்டலாக பதில் அளித்தது தொடர்பாக கேள்விக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை என கூறினார். தங்களது தலைவரை உயர்த்தி பேச வேண்டும் என்பதற்காக அந்த கருத்தினை கூறி இருக்கலாம். 2014 நாடாளுமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறி தனித்து நின்றோம், 37 இடங்களில் வெற்றி பெற்றோம்.

1990ல் சந்திரசேகர் மற்றும் 1998ல் வாஜ்பாய் ஆகியோர் பிரதமராக வர அதிமுக கொடுத்த ஆதரவு தான் காரணம். இதற்கு அண்ணாமலைக்கு சிரிப்பு வரவில்லையா.. அன்றைக்கு அவர் இல்லை.  முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் பாலாஜி கருத்து அவருடைய கருத்து என்று கூறி சென்று இருக்கலாம். இதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை, அண்ணாமலையை பார்த்து தான் நாங்கள் சிரிக்க வேண்டி உள்ளது என கடம்பூர் ராஜூ விமர்சித்தார். 

இதையும் படியுங்கள்

நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளரா? - அண்ணாமலையின் நக்கல் பதில்

click me!