தமிழக ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் பாஜகவின் சதி உள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டி உள்ளார்.
புதுச்சேரியில் குலகல்வி திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் ஒன்றிய அரசை கண்டித்து மாநில திராவிட கழகம் சார்பில் பொதுக்கூட்டம் மாநில தலைவர் சிவ. வீரமணி தலைமையில் முத்தியால்பேட்டையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக மாநில அமைப்பாளர் சிவா உள்பட காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திராவிடர் கழக தலைவர் வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு எப்பொழுதும் ஒரு அமைதி பூங்கா. அதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழக ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து கொண்டு வந்தவர் பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் தான். தமிழக ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற தாக்குதலில் பாஜகவுக்கும் தொடர்பு உள்ளது. பாஜகவினர் இதே போன்று பல நேரங்களில் செய்து தங்களுக்கு பெருமை உண்டாக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தது பாஜக வழக்கறிஞரா.? உண்மை என்ன.?
தமிழக ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வெடித்த சம்பவத்தில் ஆழமாக விசாரித்து பார்த்தால் இதன் பின்னணியில் முழுக்க முழுக்க பாஜகவின் திட்டமாக இருக்கக்கூடிய அளவிற்கு இரண்டு மூன்று ஆதாரங்கள் தெளிவாக சமூக வலை தளங்களில் வந்துள்ளன. எனவே அந்த கோணங்களில் மட்டுமே தீவிரமாக விசாரிக்க வேண்டும். ஆளுநர் பல இடத்திற்குச் சென்றுள்ளார். அப்பொழுது கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளனரே தவிர இது போன்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பாஜகவினர் அரசியல் திருப்பங்களை உண்டாக்கவும், தமிழக அரசு மீது பழி போடலாம் என்றும் நினைக்கின்றனர். அது ஒருபோதும் செல்லாது. மேலும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை தருகிறோம் என்று கூறிவிட்டு அந்த இட ஒதுக்கீடு எப்ப வரும் என்று சொல்ல முடியாது என்ற நிலை இருக்கிறது. இதைவிட பெண்களை ஏமாற்றும் மோசடி குற்றம் வேறு ஏதும் இல்லை. பெண் இனம் வஞ்சிக்கப்பட்டுள்ளதாகவும், ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அதற்கு ஒரே பதில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் இவற்றை நிறைவேற்றுவோம் என சோனியா காந்தியே கூறியுள்ளார் என்றார்.