அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை செய்ய கோரிய மனு... ஜூன் 20ல் விசாரிக்கிறது சென்னை உரிமையியல் நீதிமன்றம்!!

By Narendran SFirst Published Jun 17, 2022, 5:31 PM IST
Highlights

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி திண்டுக்கல் மாவட்டம், ஆவிலிபட்டியைச் சேர்ந்த அதிமுக, உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவை ஜூன் 20ல் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரிக்கிறது. 

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி திண்டுக்கல் மாவட்டம், ஆவிலிபட்டியைச் சேர்ந்த அதிமுக, உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவை ஜூன் 20ல் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரிக்கிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் பலர் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. இதுமட்டுமின்றி, அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என சென்னையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இத்தகைய போஸ்டர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் கிழிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. போஸ்டர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இது அக்கட்சியில் பெரும் மோதல்களை உண்டாக்கியுள்ளது. இதை அடுத்து அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது கட்சிக்குள் சூடுபிடித்துள்ளது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் தனித்தனியே தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனிடையே அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுகவின் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி திண்டுக்கல் மாவட்டம், ஆவிலிபட்டியைச் சேர்ந்த அதிமுக, உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த  நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்றம் அதிமுக பொதுக்குழுவிற்கு தடைவித்திக்க மறுப்பு தெரிவித்ததோடு, அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மனுதாரர் சூரியமூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவரணி முன்னாள் பொருளாளர் சி.பாலகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். தொண்டர்களுக்கு வாய்பளிக்காமல் நடத்தப்பட்ட தேர்தலை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுகுழுவை நடத்துவது சட்டத்திற்கு எதிரானது எனவும், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே திண்டுக்கல் மாவட்டம், ஆவிலிபட்டியைச் சேர்ந்த அதிமுக, உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவை ஜூன் 20 ஆம் தேதி சென்னை உரிமையியல் சென்னை நீதிமன்றம் விசாரிக்கிறது. 

click me!