தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு தேமுதிக சார்பில் விருப்பமனு. மாபெரும் வெற்றிபெறுவோம்- விஜயகாந்த்.

By Ezhilarasan BabuFirst Published Feb 18, 2021, 11:53 AM IST
Highlights

மேலும் அவர் கூறியிருப்பதாவது, சட்டமன்ற தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளிப்பதற்கு, தேமுதிகவின் நிர்வாகிகளாகவும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.  

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும் தேமுதிக தொண்டர்களும் சட்டமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் 25- 2-2021 வியாழக்கிழமை முதல் 5-3-2021 வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை விருப்ப  மனுக்களை பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்து தலைமையகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர், கழக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது, சட்டமன்ற தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளிப்பதற்கு, தேமுதிகவின் நிர்வாகிகளாகவும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தொகுதிகள் விருப்பமனு கட்டணமாக ரூபாய் 15,000 தமிழ்நாடு சட்டமன்ற தனி தொகுதிகள் விருப்பமனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற பொது தொகுதிகளுக்கான விருப்பமனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற தனி தொகுதிகள் உறுப்பினர் கட்டணமாக ரூபாய் 5 ஆயிரம் செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். 

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், தேர்தல் பணிக்குழு செயலாளர்கள், தமிழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்டம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வார்டு கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகளும் மற்ற கழகத் தொண்டர்களும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாம் மாபெரும் வெற்றியடைய பாடுமாறு கேட்டுக் கொள்கிறேன். என விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.  

click me!