கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.. அதிமுக வேட்பாளருக்கு தொற்று உறுதி.. அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்..!

Published : Apr 08, 2021, 04:27 PM IST
கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.. அதிமுக வேட்பாளருக்கு தொற்று உறுதி.. அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்..!

சுருக்கம்

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டவர் எஸ்.ஜெயக்குமார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், தேர்தல் அன்று அவரது வாக்கை பதிவு செய்த பின்னர் பல்வேறு இடங்களுக்குச் சென்று வாக்குப் பதிவினை நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில், அன்றை தினமே திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 10 நாட்கள் தனிமையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி