இந்தப் பித்தலாட்டக்காரர்களை பெரியார் இருந்திருந்தால் செருப்பால் அடித்திருப்பார்... வெறி கிளப்பும் விமர்சனம்..!

Published : Jan 20, 2020, 12:47 PM IST
இந்தப் பித்தலாட்டக்காரர்களை  பெரியார் இருந்திருந்தால் செருப்பால் அடித்திருப்பார்... வெறி கிளப்பும் விமர்சனம்..!

சுருக்கம்

ரஜினியின் தந்தை பெரியார் பற்றிய அவதூறு பேச்சுகளுக்கு ‘தந்தை பெரியார் திராவிட கழகம்” பலவித சட்ட எதிர்ப்பை தெரிவித்திருக்கிறதே தவிர, திராவிடர் கழகமோ கி.வீரமணியோ எதுவுமே வாய் திறக்காததில் உள்ளது அரசியல் எனவும் கருத்து கூறுகின்றனர்.  

பெரியார் ஊர்வலத்தில் ராமர், சீதை உருவங்கள் செருப்பால் அடிக்கப்பட்டதாக ரஜினி பேசியதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் பிரபல ஆங்கில நாளிதழ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. 

துக்ளக் 50ம் ஆண்டு விழாவில், பேசிய ரஜினி, ‘’1971ல் சேலத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் பெரியார், ராமர், சீதையின் உருவப்படங்களை செருப்பால் அடித்து அசிங்கப்படுத்தினார்’’என பேசியது சர்ச்சை ஆனது. இந்நிலையில், அவர், பெரியாரை பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக வெகுண்டெழுந்த திகவினர், ரஜினி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு இடங்களில் புகார் மனு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினி பேசியது உண்மைதான் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், 1971ல் சேலம் மாநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், செய்திகளையும் பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.  ரஜினியின் பேச்சால் வெகுண்டெழுந்த திகவினர் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகின்றனர்.   

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கு ம் நடுநிலைமையாளர்கள், ’முரசொலியில் ஒரு கட்டுரையில் பெரியார் தொடர்பாக ரஜினி சொன்ன பொய்யை ஒழுங்காக, எளிமையாக படங்களுடனும், ஆதார இணைப்புகளுடனும் அம்பலப்படுத்திவிட்டு, "இப்படி பகுத்தறிந்து பேசும் மக்களின் நாளேடு தான் முரசொலி" என்று நிலை நிறுத்தும் விதமாக முடித்திருக்கலாம்’’எனக் கூறுகின்றனர். 

ரஜினியின் தந்தை பெரியார் பற்றிய அவதூறு பேச்சுகளுக்கு ‘தந்தை பெரியார் திராவிட கழகம்” பலவித சட்ட எதிர்ப்பை தெரிவித்திருக்கிறதே தவிர, திராவிடர் கழகமோ கி.வீரமணியோ எதுவுமே வாய் திறக்காததில் உள்ளது அரசியல் எனவும் கருத்து கூறுகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!