வள்ளுவர் சிலையை விட 2 அடி கூடுதல் உயரத்தில் பெரியார் சிலை.. காரணம் இதுதானா..?

By Ezhilarasan BabuFirst Published Sep 9, 2021, 10:38 AM IST
Highlights

இது பல்வேறு திராவிட பற்றாளர்கள் மற்றும் முற்போக்காளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக பாஜகவும் பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவிப்பு செய்தமைக்கு வரவேற்பளித்துள்ளது.

தமிழகத்திலேயே மிக உயரமான சிலையாக 133 அடியில் கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை இருந்துவரும் நிலையில், அதைவிடக் கூடுதலாக 135 அடி உயரம் கொண்டதாக பெரியார் சிலை அமைய உள்ளது. எனவே மாநிலத்தின் மிக உயரமான சிலை என்ற அந்தஸ்தை தந்தை பெரியார் சிலை பெற இருக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் பல்வேறு அதிரடி மக்கள் நல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து வருகிறார். அவரின் அறிவிப்புகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் பகுத்தறிவு பகலவன், அறிவுச்சுடர் தந்தை பெரியாருக்கு 135 அடி உயரத்தில் சுமார் 100 கோடி செலவில் சிலை அமைக்கப்படும் என அறிவிப்புச் செய்துள்ளார். 

இது பல்வேறு திராவிட பற்றாளர்கள் மற்றும் முற்போக்காளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக பாஜகவும் பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவிப்பு செய்தமைக்கு வரவேற்பளித்துள்ளது. இந்நிலையில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருச்சி சிறுகனூரில் சுமார் 40 அடி பீடத்தின் மீது பெரியாரின்95 அடி உயர சிலை அமைய உள்ளது. எனவே மாநிலத்தின் மிக உயரமான சிலை விரைவில் திருச்சி மாவட்டத்தில் இடம்பெறு உள்ளது. பெரியார் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதை குறிக்கும் வகையில் பெரியார் சுயமரியாதை பிரச்சார இயக்கம் 95 அடி உயர சிலை நிறுவ உள்ளது. தற்போது சிலை அமைக்க மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. அதேபோல் சுமார் 26 ஏக்கரில் பெரியார் உலகம் அமைய உள்ளது. அதில் நூலகம் மற்றும் குழந்தைகள் பூங்கா உள்ளிட்டவைகள் இடம்பெற உள்ளது.

பெரியார் சிலை அமைக்கும் பணி மூன்று ஆண்டுகளில் முடிவடையும் எனவும், திராவிட கழகத் தலைவர் கி வீரமணி அறிவித்துள்ளார் மேலும் சிலை அறிவித்து அனுமதி வழங்கிய முதல்வருக்கு நன்றியும் அவர் கூறியுள்ளார் இதில் கவனிக்க கூடிய முக்கியமான விஷயம் என்னவென்றால் கன்னியாகுமரியில் உள்ள ஒரு  சிறு தீவில் சுமார் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு மாநிலத்திலேயே உயரமான சிலை ஆகாது இருந்துவரும் நிலையில் சுமார் 40 அடி பீடத்தின் மீது 95 அடி உயர சிலை பெரியாருக்கு அமைய உள்ள நிலையில் மாநிலத்திலேயே மிக உயரமான சிலையாக அது அமைய உள்ளது. திருச்சி சிறுகனூர் முக்கிய சுற்றுலா தளமாகவும் மாறும், என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த தளம் கன்னியாகுமரி செல்லும் அதே நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

click me!