பெரியார் படத்தை செருப்பால் தைரியமாக அடித்த விபூதி வீரமுத்து தேவரை தெரியுமா..?

By vinoth kumarFirst Published Jan 26, 2020, 10:52 AM IST
Highlights

பெரியார் கும்பல் தங்களுக்கே உள்ள பகுத்தறிவுடன்... “என் பணத்தில் நான் காசுகொடுத்து வரைந்த படத்தினை எனது செருப்பால் நான் அடிப்பதில் என்ன தவறு? இதை கேட்க நீயார்? என விபூதியை கேட்டனர். மறுதினம்... அதே இடத்தில் ஈவேராவின் படத்தினை வரைந்து அதை செருப்பால் அடித்தார் விபூதி வீரமுத்து. கேள்விகேட்டு கோபத்துடன் வந்த ஈவேரா அண்ட் கோவுக்கு அவர்கள் பாணியிலேயே பதில் சொன்னார் விபூதி வீரமுத்து. 


இந்து கடவுகளை மட்டும் கீழ் தரமாக விமர்சனம் செய்வதும் திட்டுவதையும் வாடிக்கையாக வைத்திருந்த பெரியார் படத்தை அன்றே செறுப்பால் அடித்து விபூதி வீரமுத்து தனது எதிர்ப்பை காட்டினார். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் 1971-ம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில் சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் இந்து கடவுள்களான ராமர் சீதையின் உருவ படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து இழிவு செய்யப்பட்டது என கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் தொடர்பான ரஜினியின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. 

ரஜினியில் பேச்சில் உண்மை இல்லை என அதிமுக, திமுக மற்றும் பெரியார் இயக்கங்கள் ஒன்றிணைந்து ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தனர். பெரியாரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கிலும் பாஜக ஆர்எஸ்எஸ்ஐ மகிழ்விக்கும் நோக்கிலும் ரஜினி இவ்வாறு பெரியார் மீது கூறியுள்ளார் என குற்றச்சாட்டுகளும் எழுந்தன. அதுமட்டுமின்றி பெரியாரை அவதூறாக பேசியதற்காக பகிரங்கமாக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், எதுக்கும் அசைந்து கொடுக்காமல் தன் பேச்சில் எந்த தவறும் இல்லை. அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

இந்நிலையில், பெரியார் தமது காலத்தில் ராமர் படத்தினை சேர்ப்பால் அடித்து இந்து வெறுப்பை காட்டியபோது. விபூதி வீரமுத்து தேவர் எதிர்த்து கேள்வி கேட்ட ஆண் மகன் ஆவார். விபூதி வீரமுத்து கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் பகுதியில் இருந்தவர். தேவர் சமூகத்தினை சேர்ந்தவர். பெரியார் தமது காலத்தில் ராமர் படத்தினை செருப்பால் அடித்து இந்து வெறுப்பை காட்டியபோது. எதிர்த்து கேள்வி கேட்ட ஆண் மகன். 

பெரியார் கும்பல் தங்களுக்கே உள்ள பகுத்தறிவுடன்... “என் பணத்தில் நான் காசுகொடுத்து வரைந்த படத்தினை எனது செருப்பால் நான் அடிப்பதில் என்ன தவறு? இதை கேட்க நீயார்? என விபூதியை கேட்டனர்.

மறுதினம்... அதே இடத்தில் ஈவேராவின் படத்தினை வரைந்து அதை செருப்பால் அடித்தார் விபூதி வீரமுத்து. கேள்விகேட்டு கோபத்துடன் வந்த ஈவேரா அண்ட் கோவுக்கு அவர்கள் பாணியிலேயே பதில் சொன்னார் விபூதி வீரமுத்து. என் பணத்தில் நான் காசுக்கொடுத்து வரைந்த படத்தினை எனது செருப்பால் அடிப்பதில் என்ன தவறு இதை கேட்க நீங்கள் யார்? என கேட்க ஈவேரா கும்பலுக்கு பதில் சொல்ல முடியவில்லை...

கருப்புக்கு ஒரு மறுப்பு போன்று பல நூல்களை எழுதி பதிப்பித்து நாஸ்திக அராஜக கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் விபூதி வீரமுத்து. சிலம்புச்செல்வர் ம.பொ.சி அவர்கள் திராவிட எதிர்ப்பு மாநாடு நடத்தியபோது அதில் கலந்துகொண்டு சிறப்பித்தவர். விபூதியின் நூல்கள் அடுக்கு மொழியில் துணிவுடன் கடுமையாக திராவிட கழகத்திற்கும் அதன் தலைமைக்கு சவுக்கடி கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

click me!