முக்கிய அமைச்சரின் தூண்டுதலின் பேரில் கைது..? அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு நீதிமன்ற காவல்..!

By vinoth kumarFirst Published Jan 26, 2020, 9:13 AM IST
Highlights

அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கோவையை சார்ந்தவர் கே.சி பழனிசாமி. இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்து எம்.ஜி.ஆர் உடைய ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பு வகிந்து வந்தார். பின்னர், காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வாக ஆரம்ப காலத்திலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்பு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நீண்ட காலமாக அரசியலில் தொடர்ந்து தன்னை மிகப்பெரிய ஆளாக முன்னிறுத்தி கொண்டவர்.

அதிகாலையில் வீடு புகுந்து கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமிக்கு பிப்ரவரி 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கோவையை சார்ந்தவர் கே.சி பழனிசாமி. இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்து எம்.ஜி.ஆர் உடைய ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பு வகிந்து வந்தார். பின்னர், காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வாக ஆரம்ப காலத்திலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்பு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நீண்ட காலமாக அரசியலில் தொடர்ந்து தன்னை மிகப்பெரிய ஆளாக முன்னிறுத்தி கொண்டவர்.

இதனையடுத்து, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக 2 அணியாக பிரிந்து ஒன்றாக சேர்ந்த பின்னர் கே.சி.பழனிசாமிக்கு கட்சியில் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம் என அவர் டி.வி. விவாதத்தில் கருத்து தெரிவித்தார். இதனையடுத்து, பாஜகவின் அழுத்தம் காரணமாக 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். எனினும் நீக்கப்பட்ட பின் தொடர்ந்து கட்சியில் இருப்பதாக கூறிவந்தார். ஆனாலும், அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் அக்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். மேலும், அதிமுக தலைவர்களை விமர்சித்து பேசினார். 

இந்நிலையில், முக்கிய அமைச்சரின் தூண்டுதலின் பேரில் சூலூரைச் சேர்ந்த முத்து கவுண்டன், புதூர் ஊராட்சி மன்றத் தலைவரான கந்தவேல் என்பவர்கள் கே.சி. பழனிசாமி மீது புகார் அளித்தார். அதில், கே.சி. பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். ஆனால், அவர் தன்னை கட்சியில் இருப்பது போல் சித்தரித்து கட்சி லெட்டர் பேடு, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றுடன் சமூக வலை தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதனையடுத்து, கோவை ஆர்.எஸ்.புரம்லாலி ரோட்டில் உள்ள கே.சி.பழனிசாமியை அதிகாலை வீட்டில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அவர் மீது  11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சூலூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு பிப்ரவரி 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இவரது கைதுக்கு பின்னணியில் முக்கிய பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவர் உள்ளதாக கூறப்படுகிறது. 

click me!