பிள்ளையாரை வைத்து பணம் சம்பாதித்த பெரியார்..? அதிர வைக்கும் ஃப்ளாஷ்பேக்..!

By Thiraviaraj RMFirst Published Jan 22, 2020, 6:43 PM IST
Highlights

உடனே அந்த வெங்காய மூட்டைகளை ஏலம் விட்டு காசு எண்ணி எடுத்துக்கொண்டு சென்றார் என பழைய ப்ளாஷ்பேக்குகளை கூறுகிறார்கள் ஆத்திகவாதிகள்.

70களில் இப்போதுள்ளதுபோல் பல தொலைக்காட்சிகள் இருந்திருந்தால் ஹிந்துமத கடவுளர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டு அப்போது நடந்த தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்திருக்கும். 

திகவிற்கும், திமுகாவிற்கும் கொள்கை அளவில் பெரிய வேறுபாடு கிடையாது. ஒரேயடியாக கடவுளர்களை அறவே வெறுத்து ஒதுக்கக்கூடாது என அண்ணா  திருமூலர் நாராயண குரு போன்றோரின் வார்த்தைகளை கையாண்டு கிறிஸ்துவ இஸ்லாம் சமுதாய மக்களின் ஓட்டுக்களை பெற ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என அறிவித்தார்.

திக தேர்தல் பாதை அது. பெரியாரின் கடவுள் மறுப்பு மற்றும் அவர் பேசிய சுயமரியாதை பகுத்தறிவு கொள்கைகள் பல உள்ளன. ஆனால் அவர் சொல்லும் முறை மிகவும் ஆபாச வசை சொற்களால் கடுமையாக இருக்கும். இந்த பெரியார் நாத்திகம் பேசியே அதிகம் கடவுளர்களை நினைத்துக் கொண்டிருந்தவர் அவர் எழுதிய கீமாயணம் என ராமாயணத்தை உல்ட்டா செய்து மிக கேவலமாக திட்டி எழுதியும் உள்ளார்.

 

பெரியாரின் கடவுள் மறுப்பு மற்றும் பிள்ளையார் சிலைகள் உடைத்தபோது தான் பல ஊர்களில் பிள்ளையார் கோவில்கள் புதிதுபுதிதாக முளைத்தன. ஆன்மிகம் அப்போது தழைத்தோங்க உதவியதால் பல ஊரில் பெரியாருக்கு பரிவட்டம் மலர் கிரீடம் மாலை மரியாதைகளை செய்து அவரின் எடைக்கு எடை வெங்காயம் வழங்குகிறோம் என கோவில் பட்டர்கள் கூறியவுடன் எப்படியோ பணம் வருகிறது என அதனை மிகுந்த மரியாதையுடன் ஏற்றுக் கொண்டார்கள். உடனே அந்த வெங்காய மூட்டைகளை ஏலம் விட்டு காசு எண்ணி எடுத்துக்கொண்டு சென்றார் என பழைய ப்ளாஷ்பேக்குகளை கூறுகிறார்கள் ஆத்திகவாதிகள்.

click me!