நக்குற நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியவா போகுது...?? ரஜினியை மானபங்கம் வாங்கிய நாஞ்சில் சம்பத்...!!

Published : Jan 22, 2020, 06:31 PM ISTUpdated : Jan 22, 2020, 06:32 PM IST
நக்குற நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியவா போகுது...?? ரஜினியை மானபங்கம் வாங்கிய நாஞ்சில் சம்பத்...!!

சுருக்கம்

இவ்வளவு அறிவுரை சொல்லும் ரஜினிக்கு  செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன்னர்  எது எந்த பத்திரிக்கை என்ற விவரத்தை ஆய்வு செய்திருக்க வேண்டாமா என ரஜினியை பலர் கிண்டலடித்து  வருகின்றனர் .  

நக்குற நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியவா போகுது என நடிகர் ரஜினிகாந்தை நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார் . நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து தெரிவித்த கருத்துக்கு நாஞ்சில் சம்பத் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார் .  துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து தெரிவித்த கருத்து ஒட்டுமொத்த திராவிட இயக்க அரசியல் தலைவர்களையும்  திராவிட இயக்க சிந்தனையாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் புள்ளிகள் இயக்குகின்றனர் என திருமாவளவன் உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர் . 

சாதிக்கொடுமை , சமூகநீதி என வாழ்நாளெல்லாம் தமிழ் சமூகத்திற்காக வாழ்ந்து மறைந்த பெரியார் குறித்து ரஜினி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென திராவிடர் கழகம் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திய நிலையில் ,  தான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை , அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி திட்டவட்டமாக மறுத்துள்ளார் .  ஆனாலும் ரஜினியை அரசியலுக்கு அப்பாற்பட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர் .  அத்துடன் பெரியார் பேசியதற்கான ஆதாரம் என செய்தியாளர்களுக்கு மத்தியில்  ஒரு பத்திரிக்கை நகலை காட்டிய ரஜினி ,  இந்து குழுமத்தின் அவுட்லுக் பத்திரிக்கை எனகூறி  புதிய சர்ச்சையில் சிக்கினார். 

இவ்வளவு அறிவுரை சொல்லும் ரஜினி  செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன்னர்  எது எந்த பத்திரிக்கை என்ற விவரத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டாமா என  பலர் ரஜினியை கிண்டலடித்து  வருகின்றனர் .   இந்நிலையில் இலக்கியச் சொற்பொழிவாளரும்  அரசியல் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் டுவிட் ஒன்றை வெளியிட்டுள்ளார் , அதில் அவுட்லுக்குன்னு சொல்றாரு , " இந்து  குழுமம்னு சொல்றாரு அதுசரி  நக்குற நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியவா போகுது"# பெரியார் #ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டுள்ளார் . இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை நாயுடன் ஒப்பிட்டு பேசியதற்கு அவரது ரசிகர்கள் நாஞ்சிலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!