கடவுள் மறுப்பு பேசிய பெரியார் கடவுள் நம்பிக்கையாளர்களை வெறுத்ததில்லை.. நடிகர் சிவக்குமார் பேச்சு.!

Published : Apr 26, 2022, 07:00 AM ISTUpdated : Apr 26, 2022, 08:23 AM IST
கடவுள் மறுப்பு பேசிய பெரியார் கடவுள் நம்பிக்கையாளர்களை வெறுத்ததில்லை.. நடிகர் சிவக்குமார் பேச்சு.!

சுருக்கம்

ஆதிக்க சக்திகளைதான் பெரியார் வெறுத்தார். பிராமணீயத்தைதான் பெரியார் வெறுத்தார். ஆனால், அவர் பிராமணர்களை வெறுக்கவில்லை. 

ஒடுக்கப்பட்ட மக்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ்.,  ஆசிரியர், மருத்துவர் உட்பட அனைத்து துறைகளிலும் புற்றீசல் போல பணியில் இருப்பதற்கு தந்தை பெரியார் போட்ட விதைதான் காரணம் என நடிகர் சிவக்குமார் கூறியுள்ளார்.

கடவுள் நம்பிக்கையாளர்களை மதித்த பெரியார்!

கோவை மாவட்டம் சூலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழக அரசின் விருது பெற்ற செந்தலை ந. கவுதமன் மற்றும் சூலூர் கலைப்பித்தன் ஆகியோருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இந்தப் பாராட்டு விழாவில் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் கலந்து கொண்ண்டார். அப்போது அவர் பேசுகையில், “சூலூருக்கும் சுயமரியாதை கொள்கைக்கும் நிறைய தொடர்பு உண்டு., தந்தை பெரியார் கடவுள் மறுப்பை பேசினார். ஆனால், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை பெரியார் அவமரியாதை செய்தது இல்லை. குன்றக்குடி அடிகளார் இருக்கையில் அமர்ந்திருந்தபோது அவருக்கு இணையாக உட்கார மறுத்தவர் பெரியார். 

பிராமணீயத்தை வெறுத்தார்

ஆதிக்க சக்திகளைதான் பெரியார் வெறுத்தார். பிராமணீயத்தைதான் பெரியார் வெறுத்தார். ஆனால், அவர் பிராமணர்களை வெறுக்கவில்லை. இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ், மருத்துவர், இன்ஜீனியர், வழக்கறிஞர் உட்பட உட்பட அனைத்து துறைகளிலும் புற்றீசல் போல பணியில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம், அன்று தந்தை பெரியார் போட்ட விதைதான். காலங்கள் கூடக் கூட பெரியார் மீது மரியாதை கூடிக் கொண்டே செல்கிறது. அவர் மீது விமர்சனர்களும் வந்து கொண்டேதான் இருக்கின்றன” என்று சிவக்குமார் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்