133 அடி உயரத்தில் பெரியார் வெங்கல சிலை... 27 ஏக்கரில் பிரம்மாண்டமாக உருவாகும் பெரியார் உலகம்.. எங்கு தெரியுமா?

By Thiraviaraj RMFirst Published Sep 8, 2021, 1:24 PM IST
Highlights

பெரியார் உலகம் முழுக்க முழுக்க திராவிர் கழக சொந்த நிதியில் இருந்து உருவாக்கப்படுகிறது. ஒரு வீடு கட்ட அரசு அனுமதி வேண்டும். அதுபோல் இந்த சிலை வைக்க மற்றும் அந்த அமைப்புக்கான கட்டமைப்புக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

பெரியார் உலகம் முழுக்க முழுக்க திராவிர் கழக சொந்த நிதியில் இருந்து உருவாக்கப்படுகிறது. ஒரு வீடு கட்ட அரசு அனுமதி வேண்டும். அதுபோல் இந்த சிலை வைக்க மற்றும் அந்த அமைப்புக்கான கட்டமைப்புக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி  திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் ஒன்றை உருவாக்க உள்ளதாக பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவனம் அறிவித்துள்ளது. திருச்சியில் இருந்து சுமார் 18கிமீ தொலைவில் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த சிறுகனூர். இங்கு 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் ஒன்றை உருவாக்க இருப்பதாக திராவிட கழகத்தின் பெரியார் சுய மரியாதை அறிவித்துள்ளது.

அங்கு 40 அடி உயர பீடத்தில் 95 அடி உயரம் கொண்டுள்ள தந்தை பெரியாரின் வெண்கல சிலை ஒன்று அமைய உள்ளது. 133 அடி உயரத்தில் அமையும் உலகின் மிக உயரமான பெரியார் சிலையாக இது அமைகிறது. இங்கு பெரியாரின் வரலாற்றை விளக்கும் ஒளி - ஒலி காட்சிகளுடன் கூடிய அருங்காட்சியகம், மெழுகு சிலை அரங்கமும் அமைக்கப்பட உள்ளது. கண்காட்சி, கோளரங்கம், பெரியார் படிப்பகம், குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய மிகப்பெரிய பூங்காவும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

பெரியார் படிப்பகம், நூலகம், புத்தக விற்பனையகம் ஆகியவனவும் அங்கு அமைக்கப்பட உள்ளன. உணவகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக பெரியார் உலகம் உருவாக்கப்பட உள்ளது. இது தான் உண்மையே தவிர பெரியார் சிலை மட்டும் நூற்ய் கோடி ரூபாயில் உருவாக உள்ளதாக உண்மைக்கு மாறாக பிரச்சாரம் செய்வதை தோழர்கள், பற்றாளர்கள் சமூக வைதளங்களில் வெளிப்படுத்துவீர் என  திராவிட கழகத்தின் பெரியார் சுய மரியாதை தலைமை அறிவித்துள்ளது. 

click me!