தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப கவனமாக இருங்க .. அடித்து நொறுக்க போகுதாம்.

Published : Sep 08, 2021, 12:25 PM IST
தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப கவனமாக இருங்க ..  அடித்து நொறுக்க போகுதாம்.

சுருக்கம்

10.09.2021 முதல் 12.09.2021 வரை:  மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தென்மேற்கு பருவ காற்று காரணமாக 08.09.2021 முதல் 12.09.2021 வரை : தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்  ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில்  அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):  பந்தலூர்  (நீலகிரி) 9, தேவலா (நீலகிரி) 6, அவலாஞ்சி  (நீலகிரி) 5, கூடலூர் பஜார்  (நீலகிரி), நடுவட்டம்  தலா  4, மேல்  பவனி  (நீலகிரி) 2, சோலையாறு  (கோவை), ஏற்காடு  (சேலம்),  தர்மபுரி,   தேக்கடி   (தேனி), பெரியாறு (தேனி), தலா  1. மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்க கடல் பகுதிகள் 08.09.2021, 09.09.2021: தென் கிழக்கு, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 10.09.2021 முதல் 12.09.2021 வரை:  மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். அரபிக்கடல் பகுதிகள்: 08.09.2021 முதல் 12.09.2021 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

அமமுக யாருடன் கூட்டணி?.. மதில் மேல் பூனையாக டிடிவி தினகரன்.. முக்கிய அறிவிப்பு!
லாட்டரி லீமா ரோஸின் 'மாஸ்டர் பிளான்': எடப்பாடியிடம் போட்ட டீல்..? அதிரும் அரசியல் களம்..!