"அண்ணே... ஓபிஎஸ் அண்ணே.. உங்களுக்கு ஈவு இரக்கமே இல்லையா?" - திட்டி தீர்க்கும் பெரியகுளம் பெண்கள்!!

 
Published : Jul 13, 2017, 11:00 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
"அண்ணே... ஓபிஎஸ் அண்ணே.. உங்களுக்கு ஈவு இரக்கமே இல்லையா?" - திட்டி தீர்க்கும் பெரியகுளம் பெண்கள்!!

சுருக்கம்

periyakulam women yelling at ops

முன்னாள் முதலமைச்சர்  ஓபிஎஸ் தனக்கு சொந்தமான இடத்தில் 5 ராட்சத கிணறுகள் வெட்டியதால் அப்பகுதியில் பொது மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட லட்சுமிபுரம் ஊராட்சியில் ஓபிஎஸ்க்கு சொந்தமான இடத்தில்  4 ராட்சத கிணறுகள் தோண்டியதால் லட்சுமிபுரம் ஊராட்சியில் உள்ள பல்வேறு கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கும் நீரின்றி பயிர்கள் காய்ந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 4 ராட்சத கிணறுகள் தோண்டிய நிலையில் தற்போது மேலும் ஒரு கிணறு தோண்டப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடந்த வாரம் தங்களது வீடுகள், கடைகள் போன்றவற்றை அடைத்துவிட்டு ஓபிஎஸ் கிணற்றை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த போலீசார் பொது மக்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்த போராட்டத்துக்கு எந்த பதிலும் கிடைக்காததால் நேற்று நூற்றுக் கணக்கான பெண்கள் கிணற்றை முற்றுகையிட்டு மீண்டும் போராட்டத்தில்  ஈடுபட்டனர். 

அப்போது பேசிய பெண் ஒருவர், "அண்ணே ஓபிஎஸ் அண்ணே உங்களுக்கு ஈவு இரக்கமே இல்லையா ? மரியாதையா உங்க கிணற்றை மூடிவிடுங்க…. 2 மாசமா நாங்க குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகிறோம்… எங்களுக்கு குடிநீர் கொடுங்க அல்லது உங்கள்  கிணற்றை மூடுங்க.. அதுவரை நாங்க போராட்டத்தை கைவிட மாட்டோம்…

நாங்கதான் உங்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தோம்…நீங்களே எங்களுக்கு துரோகம் பண்றீங்களா ? எங்களையே போலீசை விட்டு அடிக்க விடுறீங்களா.. உங்களோட கிணத்தை மரியாதையா மூடிருங்க…இது நாங்க உங்களுக்கு விடும் எச்சரிக்கை" என சரமாரியாக திட்டித் தீர்த்தனர்

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!