
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்பது சந்தேகமே என மத்திய துணை அமைச்சர் இல.கணேசன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அதிமுக இரண்டாக பிளவு அடைந்த பின்னர், சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியென செயல்பட்டு வந்தது. அதிமுக இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி இரண்டு அணியினரும், தேர்தல் ஆணையத்திடம் கோரி உள்ளனர்.
இது தொடர்பாக இரண்டு அணியினரும், இரட்டை இலை சின்னத்தை சட்டப்படி எப்பாடுபட்டாவது மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் இல.கசேணன் கூறும்போது, அதிமுகவிற்கு இரட்டை இலைசின்னம் கிடைக்குமா என்பது சந்தேகமே என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அவர். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்று கூறினார். மேலும், அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்பது சந்தேகமே எனவும் இல.கணேசன் சேந்தேகம் எழுப்பியுள்ளார்.