பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முருகனுக்கு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்து வருவதால், ஜெயலலிதா பாணியில் விரைவில் வேட்பாளரை மாற்ற இபிஎஸ், ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முருகனுக்கு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்து வருவதால், ஜெயலலிதா பாணியில் விரைவில் வேட்பாளரை மாற்ற இபிஎஸ், ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்காரணமாக தான் தேனியில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பெரியகுளம் தொகுதி வேட்பாளர் முருகன் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. பெரியகுளம் தொகுதியில் திமுக சார்பில் ராயப்பன்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமார் களமிறங்குகிறார். அதுபோல தகுதிநீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவாளரான கதிர்காமு களமிறங்க இருக்கிறார். இந்நிலையில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் பெரியகுளம் தென்கரை அருகே உள்ள கல்லுப்பட்டி சேர்ந்தவர்.
சென்னையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் சோசியல் வெல்பர் ஆபீஸராக இருக்கிறார் கட்சிக்காரர்களுக்கும் அறிமுகம் இல்லாதவர் கட்சி பொறுப்பிலும் இல்லை சாதாரண உறுப்பினராக அரசு பணியில் இருக்கும் முருகன் ஒபிஎஸ்சின் ஆதரவாளர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிந்துரையின் பேரில் ஓபிஎஸ் சீட் கொடுத்து இருக்கிறார் என்ற பேச்சு அதிமுக கட்சிக்காரர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. கட்சிக்காக உழைத்தவர்கள் இருந்தும் கூட தொகுதி மக்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் அறிமுகமில்லாத புதுவேட்பாளரை ஓபிஎஸ் அறிவித்ததை கண்டு அதிமுகவினர் அதிர்ச்சியில் இருந்து வந்தனர் இதுதொடர்பாக அதிமுக தலைமைக்கு புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் ரவீந்திரன் மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற வேட்பாளர் லோகிராஜனை அறிமுகப்படுத்தப்பட்டனர். அப்போது பெரியகுளம் தொகுதியில் போட்டியிடும் முருகன் கலந்து கொள்ளவில்லை. இதனால் பெரியகுளம் தொகுதி வேட்பாளரான முருகனை அதிமுக தலைமை மாற்றம் செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.