மு.க.ஸ்டாலின் கழற்றி விட்டால் என்னாவது..? வைகோ- திருமா பிடிவாதம்..!

By Thiraviaraj RMFirst Published Mar 21, 2019, 1:11 PM IST
Highlights

ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, தேர்தல் அலுவலர் ஒதுக்கப்போகும் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவார் என அக்கட்சி பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, தேர்தல் அலுவலர் ஒதுக்கப்போகும் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவார் என அக்கட்சி பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. வைகோவுக்கு ராஜ்யசபாப் எம்.பி.சீட் கொடுக்கப்பட்டுள்ளது. மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியில் அக்கட்சி வேட்பாளர் கணேசமூர்த்தி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், மக்களவை தேர்தலில் தேர்தல் அலுவலர் ஒதுக்கும் சின்னத்தில் ஈரோட்டில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி போட்டியிடுவார் என்று வைகோ அறிவித்துள்ளார். ஏற்கனவே சிதம்பரம் (தனி) தொகுதியில், திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் தொல்.திருமாவளவன், தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தார். அவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக ஒதுக்கப்படும் சின்னத்தில் போட்டியிடால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படும் என மு.க.ஸ்டாலின் கருதுவதால் விசிக, மதிமுகவை உதயசூரியன் சின்னத்தில் நிற்கக் கேட்டுக் கொண்டார் மு.க.ஸ்டாலின். ஆனாலும் தனிச்சின்னத்தில் போட்டியிட வைகோவும், திருமாவளவனும் பிடிவாதம் காட்டி வருகின்றனர். 

இதற்கு காரணமும் இருக்கிறது. பொதுவாக ஒரு கட்சி தனது சின்னத்தில் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் 5 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக 1968-ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் தொடர்பாக ஆணையம் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, முந்தைய சட்டப்பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்கும் 2 தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் 6 சதவீத வாக்கு மற்றும் குறைந்தபட்சம் ஒருவர் அக்கட்சியில் இருந்து மக்களவை உறுப்பினர் ஆகியிருக்க வேண்டும்.

இல்லாவிட்டால், சட்டப்பேரவையில் 3 சதவீத உறுப்பினர்கள் அல்லது குறைந்தபட்சம் 3 உறுப்பினர்கள் இவற்றில் எது அதிகமோ அந்த எண்ணிக்கை எடுத்துக் கொள்ளப்படும். மக்களவை எனில், அந்த மாநிலத்தின் மொத்த உறுப்பினர்களில் 25 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் உறுப்பினரை பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த விதிகளில் ஒரு தகுதியைக்கூட விசிகவும், வைகோவும் பெறவில்லை. 

இனிவரும் காலங்களில் தாங்கள் கேட்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் அங்கீரிக்க வேண்டுமானால் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெல்ல வேண்டும். உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றால் மீண்டும் இந்த விதிகள் பொருந்தாது. அடுத்த தேர்தலில் ஒருவேளை மு.க.ஸ்டாலின் தங்களை கழற்றிவிட்டு வேறு கூட்டணிக்கு போனால் அவர்களது சின்னத்தில் நிற்க வேண்டிய நிலை உருவாகலாம். ஆகவே இப்போதே தனிச்சின்னத்தில் நின்று வெற்றிபெற்று இழந்த சின்னத்தை மீட்க வேண்டும் என இருன் கட்சித் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை தனிச்சின்னத்தில் போட்டியிட உத்தரவிட்டுள்ளனர். 

click me!