பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்... அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

By Thiraviaraj RMFirst Published Sep 14, 2021, 11:09 AM IST
Highlights

தமிழகம் முழுவதும் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 

தமிழகம் முழுவதும் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் ரூ. 4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட, தமிழ்நாட்டின் முதல் மரபணு பகுப்பாய்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், ’’கொரோனா சோதனை மாதிரிகளை பெங்களூருக்கு அனுப்பி அதன் உருமாற்றம் குறித்து ஆய்வு செய்ய, ஒரு சோதனைக்கு ரூ.5000 செலவானது. இதனால், தமிழ்நாட்டிலேயே இந்த ஆய்வகம் அமைக்க திட்டமிட்டு தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் மாநில அரசினால் மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்கப்பட்டதில்லை. முதல் முதலாக தமிழ்நாடு அரசால் தமிழ்நாட்டில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா பாதித்த சில மாணவர்கள் தற்போது நல்ல உடல் நலத்துடனே உள்ளனர். மாணவர்கள் இடையே அச்சமற்ற சூழல் உள்ளது. 1- 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார். ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக கூறியதுபோல பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். கடந்த ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பியதை சட்டமன்றத்தில் அவர்கள் தெரிவிக்கவில்லை.

 

நீட் தேர்வு முடிவுகளுக்கு பின்னர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் தரலாம் என துறை சார்பில் முடிவு செய்துள்ளோம். ஆட்சிக்கு வந்து முதல் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டமுன்வடிவு கொண்டுவரப்படும் என்றுதான் கூறினோம். ஏற்கனவே அனுப்பப்பட்ட மசோதாவுக்கும், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவுக்கும் வேறுபாடு உள்ளது. பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.


 

click me!